உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(166) ||___

அப்பாத்துரையம் - 22

வண்டியிலேற்றியபின் கெஞ்சியிடம் தன் குதிரையை ஒப்படைத் தான். பின் தன் பட்டுக் காலுறையை முட்டுக்குமேல் சுருட்டி வைத்துக்கொண்டு அவன் கால் நடையாகவே வண்டியைத் தொடர்ந்தான்.

அது ஒரு விசித்திரமான பயணம். ஆனால் தன் தலைவனது ஆறாத்துயர்கண்டு கோரெமிட்சு தற்காலிமாகத் தன் தன் மதிப்பையே அகற்றிவிட்டு வண்டியைப் பின்பற்றி நடந்தான்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணர்வே யில்லாத நிலையில், கெஞ்சி தன் மாளிகை வந்து சேர்ந்தான். அவன்முகம் பேயறைந்த முகம்போல் விளறிக் களையிழந்திருந்தது. கண்ட கண்டவர்கள் எல்லாம் வழியில் அவனை அடுத்து, உடம்புக்கு என்ன? எங்கிருந்து இத்தனை களைப்புடன் வருகிறீர்கள், ஐயனே?' என்று கேள்விகள் கேட்டவண்ணமாயிருந்தனா. ஆனால் அவன் எவருக்கும் மறுமொழியே கூறாமல் நேராகத் தன் அறைசென்று திரையிட்டு அதன் பின் சென்று படுத்துக் கொண்டான்.

அவன் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் துணுக்குறும் எண்ணங்கள் அவனைத் தொல்லைப் படுத்திக் கொண்டேயிருந்தன.

'அவளைப் பின் தொடர்ந்து செல்வேன் என்று நான் ஏன் வற்புறுத்தாமல் போய்விட்டேன்? அந்தோ, ஒரு வேளை அவள் மாளாமலிருந்து எழுந்து பார்த்து நான் அவளைக் கைவிட்டு விட்டதாக எண்ணினால் என்னாவது?'

இக்கோர நினைவுகள் அவன் மூளையில் ஒன்றையொன்று தொடர்ந்து கொண்டிருந்தன. அவன் தொண்டையையும் நெஞ்சையும் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. அவன் தலை நோவுற்றது. உடல் அனலாய் எரிந்தது. நங்கை உடலின் விசித்திர நிலைகண்டு தானும் அவளைப்போலத் திடுமென இன்ன தென்றறியமுடியாத நிலையில் இறந்துவிட நேருமோ என்றுகூட ஐயுற்றான்.

கதிரவன் வானில் நெடுந்தொலை ஏறிவிட்டான். ஆனால் கெஞ்சி எழுந்திருக்கவில்லை. அவனது துணைவர்கள் மலைப் புற்று முணுமுணுத்தனர். அவனைத் தட்டி எழுப்பத் தமக்குத்