உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

183

பற்றிய செய்தியை நானும் கோரவில்லை. தமியள் மௌனத்தின் காரணத்தைத் தாங்களும் உசாவியது கிடையாது. இந்நிலையில் நாட்கள் கழிகின்றன. துன்பத்திலும் மனக்குழப்பத்திலும் நான் மிதக்கிறேன்' என்று அப்பாடல் குறித்தது.

அவன் உண்மையில் அவளை மறக்கவில்லை. தன்துயர்கள் பெரியதாயினும் அவற்றிடையே கூட மறந்ததில்லை. அவன் பதில் இதற்குச் சான்றளித்தது. 'உத்சுசேமியின் (அதாவது பொன்சிறைத்தும்பியின்) தோடுபோல நிலையற்ற நொய்மை யுடையது என்வாழ்வு. அதில் நான் ஏற்கெனவே முற்றிலும் அலுப்படைந்து விட்டேன். ஆனால் உன் செய்தி எனக்குப் புதுவலுத் தந்து புதுவாழ்வு அளிப்பதாய் உள்ளது' என்று அவன் தெரிவித்தான். பாடல் வடிவில் அமைந்த இக்கடிதத்தின் கையெழுத்து நடுக்கமும் தடுமாற்றமும் உடையதாகவே இருந்தது. ஆயினும் அது அழகான தென்றே உத்சுசேமி மதித்தாள். பொன்சிறை வண்டு தோடுகழிப்பது போல அவள் தன் கைச் சதுக்கத்தை நழுவவிட்டதை அவன் இன்னும் மறக்கவில்லை என்பதை அது காட்டிற்று.

றஉ

இவ்வாறு கடிதங்கள் அனுப்பவதிலும் பெறுவதிலும் ஒரு தீங்கும் இருக்க முடியாதென்று இப்போது உத்சுசேமி கண்டாள். ஆயினும் நேரிடைச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் அவளுக்குச் சிறிதும் இல்லை. அதில் எத்தகைய பொருளும் ருக்க முடியாதென்பதை முடிவாக அவனே உணர்ந்து கொண்டான் என்று அவள் எண்ணினாள்.

உத்சுசேமியின் தோழிவகையில், அவள்திருமணம் நடைபெறவில்லை. உண்மையில் அவள் தோ நோ சூஜோவின் உடன்பிறந்தானான குரோதோ நோ ஷோவின் காதற் கிழத்தியாய்விட்டதாகக் கேள்வியுற்றான். தன் காதற்களத்தில்

தான்

முதல்வனல்ல என்று று கண்டால் ஷோஷோ மனத்தாங்கலுறுவானோ என்று கெஞ்சி வருந்தினான். ஏனெனில் அவனைப் புண்படுத்தக் கெஞ்சி விரும்பவில்லை. ஆயினும் அதேசமயம் அப்பெண்மணியின் மனநிலையறியும் ஆர்வம் அவனுக்கு மிகுதியாயிருந்தது. ஆகவே உத்சுசேமியின் தம்பியிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினான். தன் நோய்பற்றிய செய்தியை நினைவூட்டி, அதுவிவரம் தெரியுமா என்று கேட்டிருந்தான்.