உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. முரசாக்கி

கெஞ்சி வெப்பு வலிக்கு ஆளாகிப் பெரிதும் அழன்றான். எத்தனையோ மருந்துகள், மாய மந்திரங்களின் துணைநாடியும் ஒரு சிறிதும் பயன் காணவில்லை.அச்சமயம் யாரோ சிலர் வடமலைத் தொடர்களின் பக்கம் இருந்த ஒரு துறவுப் பெரியார் பற்றிக் கூறினர். 'சென்ற ஆண்டு இந்நோய் எங்கும் வீசியடித்த சமயம் வழக்கமான மருந்துமாயங்களால் பயன் ஏற்படாமல் மக்கள் பரிதவித்தனர். இப்பெரியார் அத்தகையோரில் மிகப் பலருக்கும் குறிப்பிடத்தக்க நலம் உண்டுபண்ணி உதவினார். ‘அவரை வரவழைத்துக் கலந்து கொள்வதில் ஒரு சிறிதும் நாட் கடத்தவேண்டாம். ஏனெனில் நீங்கள் பயனற்ற இந்த மருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாய் வழங்கிக் கொண்டிருக்கும் சமயமெல்லாம், நோய் ஒன்றுக்கு பத்தாகப்பெருகிக் கொண்டே போகும்' என்றார்கள் அவர்கள்.

பெரியவரைச் சந்தித்து அழைத்துவர ஒரு தூதன் உடனடியாக அனுப்பப்பட்டான். ஆனால் ‘முதுமையின் கடுந்தளர்ச்சி காரணமாக எங்கும் வெளியே வரமுடியாதவனா யிருக்கிறேன்' என்று அவர் மறுமொழி அனுப்பினார். 'இனி என்ன செய்வது? நான் தான் இரகசியமாக அவரைச் சென்று காண்டல் நலம்' என்று கெஞ்சி கூறினான். நம்பகமான நாலைந்து பணியாட்களுடன் விடியுமுன் எழுந்து புறப்பட்டான்.

அவர் வாழ்விடம் மலைகளிடையே சிறிது உட்பகுதியிலே இருந்தது. அப்போது மூன்றாம் மாதத்தின் கடைசி நாள், தலைநகரில் பூக்கள் யாவும் உதிர்ந்துவிடும் காலம் அது. ஆனால் இங்கே மலங்காந்தள் இன்னும் உதிர் பருவமெய்தவில்லை. திறந்த உயர்வெளிகளை அணுகுந்தோறும், மூடுபனி பலவகை அழகிய உருவங்களை மேற்கொண்டு அசைந்தியங்கிற்று. ஆசார