உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(195

என்றேனும் தம் விருப்பத்துக்கு மாறாக வரன் தேர்ந்தெடுத்தால் அல்லது தாம் மாண்டபின் தம் விருப்பத்தை அவமதித்துத் தன் கட்டளைக்கும் நோக்கத்துக்கும் மாறாக அவளது சிறு விருப்புக் கிணங்க நடக்க நேர்ந்தால், தம் ஆவியே எழுந்து வந்து அவளைக் கடலுள் ஆழ்த்திவிடும் என்று கூறியிருக்கிறாராம்!'

கெஞ்சி இக்கதையை மிகுந்த அக்கறையுடன் கேட்டான். பின் அது பற்றிச் சிரித்து நகையாடினான் 'அப்படியானால் அந்த அணங்கு எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான். பூத வடிவினனாகிய கடலிறைவனைத் தவிர வேறு கணவனைப் பெற வழியிராது' என்று முன்னாள் ஆட்சி முதல்வரின் விசித்திர ஆவலை எண்ணிச் சிரித்தான்.

இக்கதை கூறியவன் அச்சமயத்தில் ஹரிமா மாகாணத்தின் ஆட்சி முதல்வன் புதல்வனே. அவன் அரண்மனைக் கருவூலத்தில் ஒரு கணக்காயனாயிருந்து, சென்ற ஆண்டு தான் ஐந்தாம்படி நிலைக்குரிய லைக்குரிய பணி முதல்வனாகும் பேறு பெற்றிருந்தான். அவன் காதல் வேட்டைகள் வகையில் பேர் பெற்றவன். அவ்வளவு தொலை வழக்க மீறி அவன் அகாஷிக் கடற்கரைக்குச் சென்றதே தந்தையின் தடையை மீறும்படி அந்த அணங்கை வற்புறுத்தும் முயற்சிக்காகத்தான் என்றும் மற்றவர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் குசுகுசு வென்று பேசிக் கொண்டார்கள்.

அங்கிருந்த ஒருவன் அணங்கு பற்றிய தன் கருத்தைக் கூறினான். ‘அவள் பயிற்சிப் பண்பு நாட்டுப் புறப் பாங்காகவே பெரிதும் இருக்கக்கூடும். அவள் தாய் ஓரளவு சிறப்புடையவளா யிருந்ததாகத் தான் தோற்றுகிறது. ஆயினும் பழமைப்பட்ட பெற்றோர் ஆதரவில் வேறு நல்ல கூட்டுறவில்லாத நிலையில் அது வேறு எப்படி அமைய முடியும்?' என்றான் அவன்.

ஆட்சி முதல்வன் புதல்வனாகிய யோஷிகியோ இதை ஒத்துக்கொள்ளவில்லை. 'நீங்கள் கூறும் தத்துவம் சரியே. ஆனால் இதை அறிந்தவள் தான் அவள் தாய். அறிந்து தலை நகரத்தின் மிகச் சிறந்த குடும்பங்களிலுள்ள சிறுவர் சிறுமியர் களை அவ்வப்போது கடற்கரைக்கு வருகை தரும்படி அழைத்து, அவர்கள் மூலம் தன் சிறுமிக்குச் சரியான விளையாட்டுத் தோழமை கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தாள். இவ்