உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(198) |

அப்பாத்துரையம் - 22

விசிறிபோல அவள் தலையைச் சுற்றிலும் புரண்டாடின. அவள் முகம் கன்னிச் சிவந்திருந்தது. அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அதைக்கண்டு, 'என்னம்மா இது? வேறு எந்தச் சிறுமியுடனாவது சச்சரவிட்டுக் கொண்டாயா?' என்று துறவு நங்கை கேட்டாள்.

-

பேசிய சமயம் துறவு நங்கை தலை உயர்த்தினாள். அவள் முகத்துக்கும் சிறுமி முகத்துக்கும் பெரிதும் ஒற்றுமை இருந்தது என்று கெஞ்சி கருதினான். 'ஆம், அவள் சிறுமியின் தாயாகவே இருக்கக் கூடுமென்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான். இதற்குள் சிறுமியின் குரல் கேட்டது. ' இனு என் சிட்டுக் குருவியை எடுத்து வெளியே விட்டுவிட்டான் குருவிக் கூடையில் வைத்து நான் வளர்த்த சிட்டுத் தான் அது' என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் அறைக்கு வெளியே சென்று விட்டாள். பணிப் பெண்களில் ஒருத்தி இது பற்றி இனுவைக் கடிந்து கொண்டாள். 'என்ன குறும்புகக்காரப்பயல் இந்த இனு! இம்மாதிரிப் போக்கிரித் தனத்துக்கு அவனைச் சரியானபடி கண்டிக்க வேண்டும்.' சிட்டு இப்போது எங்கே போயிற்றோ? அதைப் பழக்கி வளர்ப்பதற்குத் தான் என்ன அரும்பாடு பட்டோம், எப்படியும் காகங்கள் அதை இரையாக்கி விடாமல் இருக்க வேண்டும்' என்று கூறி அவள் அறைக்கு வெளியே சென்றாள்.

அவள் நீண்ட அலையலையான கூந்தலுடையவள். வசீகரமான தோற்றமுடையவள், செவிலி சோனகன் என்று அவளை யாவரும் அழைத்தார்கள். குழந்தை அவள் பொறுப்பில் விடப்பட்டிருந்ததாகத் தெரிந்தது. அவள் சிறுமியிடம் சென்று பேசினாள். 'வாம்மா!' நீ இன்னும் இப்படிச் சிறு குழந்தை போல் நடக்கப்படாது. சிறு சிறு காரியங்களிலேயே இன்னும் நீ உன் மனதை அலட்டிக் கொண்டிருக்கிறாய். இதோ பார்! என் உடம்பு சரியான நிலையில் இல்லை. எந்த நேரமும் உன்னை விட்டு நான் பிரிக்கப்பட்டு விடலாம். இந்த நிலையிலும் நீ என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. சிட்டுக் குருவியைப் பற்றித்தான் கவலைப்படுகிறாய். அத்துடன் அதனிடமும் நீ காட்டுவது அன்பல்ல. சிற்றுயிர்களைக் கூட்டில் அடைத்து வைப்பது எவ்வளவு பொல்லாச் செயல் என்று நான் எத்தனை