உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(210

அப்பாத்துரையம் - 22

இங்கே அவன் மேலும் பேச முடியாமல் தயங்கினான்.புத்த அற நங்கையின் வயதும் உளப் பண்பும் எண்ணி மேலும் பேச அஞ்சினான். ஆனால் இப்போது அவள் அவனுக்கு உதவினாள்.

'உங்கள் கோரிக்கையைத் தெரிவிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முறை புதுமையானதாகத் தான் இருக்கிறது. ஆயினும் நீங்கள் அது பற்றி எதுவும் இன்னும் பேசாவிட்டாலும், இது உங்கள் மனமார்ந்த ஆழ்ந்த விருப்பம் என்பதில் எனக்கு ஐயமில்லை' என்றாள்.

இந்த அளவு ஊக்கம் பெற்றபின் கெஞ்சி தேறுதல் அடைந்து மீண்டும் தொடர்ந்தான்.

'தங்கள் இளமைக் காலக் கைம்மை நோன்பு பற்றியும் தங்கள் புதல்வியின் மறைவு பற்றியும் கேள்விப்பட்டு நான் மிகவும் மனநைவுற்றேன். இந்தச் சிறு குழந்தை போலவே நானும் இளமையிலே என்னைப் பெற்று அன்புடன் பேணி உயிரை இழந்தவன். இது காரணமாக என் குழந்தைப் பருவமுதல் நீடித்த தனிமையும் துன்பமும் துய்த்தவன். இருவர் நிலையிலும் உள்ள இந்த ஒப்புமையால் ஏற்பட்ட அனுதாபந்தான், இக்குழந்தை இழந்தவற்றுக்கு என்னாலான அளவு ஈடுசெய்யும் அவாவை என்னிடம் தூண்டியுள்ளது.

'புதுமை வாய்ந்த முறையில் எக்கச்சக்கமான இந்த வேளையில் உங்கள் பொறுமையின் எல்லை கடந்தும் உங்களுக்கு நான் தொல்லை கொடுத்தற்குரிய காரணம் இதுதான் - இந்தக் குழந்தைக்கு ஒரு தாயின் இடத்தை நானே வகிக்க நீங்கள் இணக்கம் அளிப்பீர்களா என்று அறிய விரும்புகிறேன்' என்று முடித்தான்.

அறநங்கை மறுமொழி கூறினாள்.

'உங்கள் எண்ணம் சீரியது, அன்பார்ந்தது. இதில் எனக்கு ஐயமில்லை.

-

ஆனால் இது

கூறுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் - உங்களுக்குக் கிடைத்துள்ள தகவல் தவறானது. என் பொறுப்பில் இங்கே ஒரு சிறுமி இருப்பது உண்மை. ஆனால் அவள் ஒரு சிறு குழந்தை. உங்களுக்கு அவளிடம் ஒரு சிறு தூசு கூட அக்கறை ஏற்பட அவள்நிலை இடம் தாரது. ஆகவே உங்கள் கோரிக்கைக்கு இணங்க முடியாது.’