உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

❖ மறைமலையம் 3 ❖

முகப்பில் குறிப்பிட்டார். பிறபிற நூல்களிலும் அம்முறையே செம்முறையெனக் கைக்கொண்டார்.

190ஆம் ஆண்டில் அடிகளார் தோற்றுவித்த மாதிகை ‘ஞானசாகரம்’ என்பது. 1911இல் தோற்றுவித்தது. ‘சமரச சன்மார்க்க சங்கம்’. தனித் தமிழ் வாழ்வாகிய அடிகளார் ‘சுவாமி வேதாசல’மாக இருந்த தம் பெயரை, ‘மறைமலையடிகள்’ ஆக்கினார். ‘ஞானசாகர’த்தை ‘அறிவுக்கடலா’க்கினார். ‘சமரச சன்மார்க்க சங்க’த்தைப் ‘பொதுநிலைக் கழக’மாக்கினார். தம் கொள்கைக்குத் தாமே சான்றானார். சான்றோரைச் சார்ந்த சான்றோர் எவ்வாறாவர்? அவரும் சான்றாவர் தாமே! ‘பால சுந்தர'மாகப் பயில வந்தவர். ‘இளவழகனார்’ ஆனார்! அழகரடி’களும் ஆனார்! அடிகளார் மகளார் ‘திரிபுர சுந்தரி’யார் ‘முந்நகரழகி’ யானார்; மருகர் ‘குஞ்சிபாதம்’ ‘தூக்கிய திருவடி’யானார்! பின்னர்ப் பிறமொழிப் பெயருடையார் தனித் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடிப் பெருமிதமாக மாற்றிப் பேணும் நிலைமை தமிழ் மண்ணுக்கும், கடல் கடந்தும் நிலங்கடந்தும் வாழும் தமிழ் கூறு நல்லுக மண்ணுக்கும் இயல்நெறியாயிற்று!

அடிகளார் கொள்கையில் வீறிய மொழிஞாயிறு பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ‘உலகத் தமிழ்க் கழகம்’ கண்டு சிற்றூர் பேரூரெல்லாம் பேரால மரமெனக் கால்கொள்ள வைத்து வளர்த்தனர். இவ்வியக்கச் சயலால் ‘மாறேம்’ என்பாரும் மாறி வருதல் கண்கூடாக் கண்டறிய வாய்க்கின்றது. மாறி நின்றோரும் மாறி நிற்கும் நிலைமையும் இல்லாமல் இல்லை!

ஒட்டு மாத்தப் பார்வையாகப் பார்த்தால் ஒரு நிலைப்பாடான மொழியாக்கச் செயற்பாடு, வாழும் மக்கள் முயற்சியளவில் நின்றுவிடாது! ஆளும் அரசுக்கே பெரும் பங்கு உண்டு. ஆளும் அரசு, வாழும் அறிஞர் பெருமக்களை அவர்கள் வாழுங் காலத்திலேயே பயன்படுத்தி மொழி யாக்கச் செயல்களை நிறைவேற்றுதல் வேண்டும்.

எந்தமண் எமக்கு ஆளுரிமை தந்ததோ அம்மண்ணின் மொழிக்கு வாழுரிமை செயல்களையெல்லாம் செய்தே ஆவேம் என்னும் திண்ணிய நோக்கும், ஆக்கச் செயல்களும் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/43&oldid=1628572" இலிருந்து மீள்விக்கப்பட்டது