உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 23

நூர்: அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனம் குழப்பமடைந்தது. ஒரு நொடி என் முகமூடி சட்டென்று விழுந்தது. அவர் என் முகத்தைப் பார்த்துப் பித்துப் பிடித்தவர் போல் என்னை நோக்கிப் பாய்ந்துவந்தார். அருகிலிருந்தவர்கள் இளவரசரைத் தடுத்து இழுத்துச் சென்றனர்.

தோழி: இளவரசர் தங்களைக் காதலித்தார் என்பது விளங்குகிறது.ஆனால் நீங்கள்...!

நூர்: என் நிலையைத்தான் இன்றுவரை என்னால் உணர முடிய வில்லையே. ஆனாலும் மனம் ஏனோ குழம்புகிறது? தோழி: தங்கள் மனம் விசித்திரமானது, அம்மா?

நூர்: என் கணவரிடம் எல்லாம் கூறவும் முடியவில்லை. கூறியிருந்தால் அவர் ஆக்ரா வருவாரா? அவரையும் இச்சூழல் இலேசில் விடவில்லை. இன்னும் என்னவெல்லாம் நேருமோ? எது நேர்ந்தாலும், உன் ஆறுதல் அன்றி எனக்கு வேறு வகையில்லை. நீ இதை யாரிடமும் கூறாதே. இப்போது போய் வா. அதோ தந்தையுடன் அவர் வருகிறார்.

தோழி: அப்படியே, அம்மா.

(இருவழியே இருவரும் போகிறார்கள்; ஆயஷும் ஷேர்கானும் வருகின்றனர்)

ஆயஷ்: என் அருமை ஷேர்! பேரரசர் குணத்தை நான் நன்கறிவேன். சிங்கம் தற்செயலாகப் பாயவில்லை என்பது உண்மையே. இப்போது யானையை உம்மீது ஏற்றியது இன்னும் பட்டப்பகல் கொடுமை. ஆயினும் கோபத்தை அடக்கிக்கொண்டு காரியத்தில் கண்ணாயிருங்கள். பேரரசரிடம் விடைபெறாமலே கடிதம் அனுப்பிவிட்டு மேஹருடன் வங்காளம் செல்லுங்கள்.

காட்சி 5

(ஆக்ரா அரண்மனை; ஜெஹாங்கீருடன் வானரராஜா உரையாடுகிறான்.)

ஜஹாங்: ஆம், இனி ஒளிவுமறைவு தேவையில்லை. நான் குறிப்பாக வங்காள முதல்வனுக்கே கட்டளை அனுப்பியிருக்