உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

97

துவரை என் ஆட்சியினால் பேரரசரைத்தான் ஆட்டிப் படைத்தேன். என் வல்லமை காட்டி இனிப் பேரரசையே ஆட்டிப் படைக்க வேண்டும்.

(குர்ரம் என்னும் ஷாஜஹான் வருகிறான்.)

ஷா: வாழ்க பேரரசி.பேரரசரை நான் காண விரும்புகிறேன். தெக்காண அரசர் மீண்டும் கிளர்ச்சி செய்திருக்கிறாராம். அவர் என்னைத் தெக்காணத்துக்குப் போக ஆணையிட்டிருக்கிறார். அதுவகையில் அவரிடம் சில செய்திகள் கூறவேண்டும். நூர்: அவர் எங்கோ வெளியே சென்றிருக்கிறார். ஷா: சரி. நான் போய்ப் பார்த்து வருகிறேன்.

நூர்: சற்றுநில், குர்ரம்! உன்னிடத்தில் ஒன்று கூற வேண்டுமென்று நினைக்கிறேன். நீ என் மருமகள் கணவனல்லவா? பேரரசருக்குரிய பிள்ளை. ஆனால் அவர் அன்பு கவர்ந்த மகன் நீயல்ல, குஸ்ரூ.

ஷா: பெற்றோர்க்கு ஒரு பிள்ளையைவிட மற்றொரு பிள்ளையிடம் பற்று மிகுதியிருப்பது இயற்கைதானே!

நூர்: அதைச் சொல்லவில்லை, குர்ரம். வருங்காலப் பேரரசன் நீ அல்ல, அவன்தான்.

ஷா: இது எப்படித் தெரியும், தங்களுக்கு?

நூர்: நீ பெரிய வீரன், நீதான் பேரரசின் வலது கை ஆனால் தந்தையின் இறுதிக் காலத்தின் போது நீ தெக்காணத்திலிருப்பாய். நீ வருமுன் அவன் பேரரசனாக்கப் பட்டுவிடுவான்.

ஷா: குஸ்ரூ என்னுடனே வரவிருக்கிறான், அதுவும் அவனாக விரும்பி. ஆனால் பேரரசர் இணக்கம் தரமாட்டாரே. நூர்: அதுவகையில் கவலை வேண்டாம், குர்ரம். நான் இணக்கம் தரச் செய்கிறேன்.

(ஷாஜஹான் போகிறான்.)

இந்தக் குர்ரம் ஒருவன்தான் இதுவரை என் வல்லமைக்கு அப்பாற் பட்டிருந்தான். விரைவில் இவனை ஒரு முடிச்சுக்குள் கொண்டுவந்து விடுகிறேன்..அஸஃவை வரவழைத்தேன். இன்னும்

காணவில்லை.