உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
107

ரெனவும், இன்னும் மேலான உலகத்திற்குச் செல்லும் பொருட்டு அவர்கள் முயலும் வண்ணம் அவர்களை ஊக்கிக் கொண்டிருந்தன ரெனவும் தெரியப் பெற்றேன்.

இந்தப் பருவுடம்பில் இருக்கையில் மிகவுஞ் சிறப்பாகப் பேசக்கூடிய பலர் பேச்சுக்களைக் கேட்டிருக்கின்றேன்; ஆனால், இவர் பேசும்போதோ இவருடைய சொற்கள் தெய்வசக்தி நிறைந்துவரக் கண்டேன்; தமது ஆன்ம சக்தியினையும் தம்முள் நிறைந்த தெய்வ சக்தியினையும் வளரச் செய்தவராயும், யான் இதுவரையில் எதிர்ப்படாத மிக உயர்ந்த மண்டலத்தில் இருப்பவராயும் உள்ள ஒருவரோடு இணங்கி அவருடன் கூடியிருப்பதுபோல் என் உள்ளம் எங்கும் உணரலானேன். அவரைச் சுற்றிலும் அழகிய ஓர் ஒளியின் கதிர்கள் விரிந்து எரிவதுபோல் தோன்றின; அவரது தலையைச் சூழப் பல நிறங்களைக் கண்டேன். இன்னும் எனது பார்வை தெளிவடையவே, களங்கமற்ற வெள்ளிய ஆடைகள் உடுத்திருந்த பதினைந்து அல்லது இருபது ஆடவரும் பெண்டிரும் அவருடன் இருத்தலைத் தெரிந்துகொண்டேன்; அவர்கள் தமது ஆன்ம சக்தியினாலும் அதன் விளக்கத்தினாலும் உலகபாலனஞ் செய்யும் ஒரு கூட்டத்தவரென்றும், உயர்ந்த மண்டலங்களிலிருந்து கீழுள்ள மண்டலங்களுக்குச் செய்தி கொண்டு வருபவர் களென்றும் எனக்குப் புலப்பட்டது. அதன்பின்னர் என்னிடம் வந்து எனக்கு ஆவிவடிவில் நின்றே செய்தி அறிவித்த தேவதூதன் ஒருவனால், அச் சிறந்த பெரியவர் உலகபாலனக் கூட்டம் ஒன்றோடு மேலுலகங்கள் ஒன்றிலிருந்து வந்து கீழே முதல் உலகத்தில் இருக்கும் மக்களுக்கு ஆன்மசக்தியை நிரப்புதற் பொருட்டும், மேலுள்ள மானத உலகத்திற்கு அவர்கள் தாமே செல்லும்படி தன்முயற்சி செய்ய வேண்டும் அவசியத்தை அவர்களுக்கு வற்புறுத்திக் காட்டுதற் பொருட்டும் பேசிக் கொண்டிருந்தனரென அறிவுறுத்தப்பட்டேன்.

இவ்வனுபவத்தின் பின்னர் எனது தூலதேகத்திற்குத் திரும்பியவுடனே யான் ஒரு தெய்வசக்தியால் நிரம்பப் பெற்றேன்; பின் நாட்களிலெல்லாம் யான் வேறு மனிதனா யினேன் என்றுணர்ந்தேன். இத்தெய்வசக்தி அத்தனை வலியுடையதாய்த் தோன்றினமையால் ஆன்ம தத்துவ உலகங்கள் ஒன்றில் யான் அடைந்த இவ் வனுபவமானது எனக்கு அளவிறந்த நன்மையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/140&oldid=1623832" இலிருந்து மீள்விக்கப்பட்டது