உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
341

தொகைக்கு ஈடான விலையுள்ள முப்பது பஞ்சுப் பொதிகளை அவர் இழந்து விட்டார். அவர் அதன்பொருட்டு மிகவு கலங்கினமையால், அவர்தம் மனைவியும் ஆற்றாமை மிக்கவளாகித், தெளிவுக்காட்சியில் திறமைவாய்ந்த ஓர் இளம் பெண்ணை யுடையரான ஹட்சன் என்னுங் கப்பற்றலைவனிடஞ் சென்று உசாவும்படி அவரைத் தூண்டினாள். நாங்கள் இருவேமும் தெளிவுக்காட்சியைப் பற்றிய செய்தியில் ஐயுறவு கொண்டவர்களாக இருந்தோம். ‘இக்காலத்திய மந்திர மூட்டையைப் போன்றவற்றில் தாம் தலையிட்டுக்கொள்ள விருப்பம் இல்லையென்று மார்ட்டன் முதலில் தெரிவித்தார்; ஆனால், முடிவாகத் தம் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கிப்போக உடன்பட்டார்.

முதலில் மாலுமி ஹட்சனுக்கு ஒன்றேகால் ரூபா கட்டணஞ் செலுத்தியபின், தெளிவுக் காட்சியுடைய அவ்விளம் பெண்ணைக் கண்டுபேச் இடம்பெற்றோம். தெளிவுக் காட்சியுடைய அறிதுயிலுக்கு அவ் விளம்பெண் செலுத்தப்பட்டபின், மார்ட்டன் அப் பெண்ணின் வலது கையைத் தமது வலக்கையிற் பிடித்துக் கொடு, தாம் கேட்க விரும்பியவைகளைக் கேட்கலாம் என்று கற்பிக்கப்பட்டார்.

அவள் கூறிய விடைகள் பின்வருமாறு இருந்தன: தியடோர் என்னுங் கப்பல் முதலிற் புறப்பட்ட துறைமுகத்திற்குத் திரும்ப நினைவினாற் சென்றாள். அக் கப்பலானது இலிவர்ப்பூலை விட்டு அட்லாண்டிக் கடலைக் குறுக்கே கடந்து, மேலிந்திய தீவுகளின் ஊடே மறுபடியும் புது ஆர்லியன்ஸ் என்னும் பட்டினத்திற்குப் போனவழியைத் திரும்பச் சொல்லிக் காட்டியதோடு, தன்கைகளாலுந் தொடர்ந்து சுட்டிக்கொண்டு வந்தாள். கடைசியாக, ‘ஆம், பஞ்சுப் பொதி காணாமற்போனது இவ்விடத்திலேதான். சுற்றிலுஞ் சிவப்புக் குறியுள்ள ஒரு பெரிய கறுப்புக் கப்பலின் மேற்றட்டிலே அவைகள் வக்கப் பட்டிருக்கின்றன.’ என்று அவள் மொழிந்தாள், அதன் பிறகு, அக் கப்பல் தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்த வழியைத் தன் சொற்களாலேயன்றிக் கையினாலுங் குறிப்பிட்டுக் காட்டுவாளானாள்; ஆனால், அட்லாண்டிக் கடலைத் திரும்பக் குறுக்கிட்டு வந்தபின், இலிவர்ப்பூலை நோக்கி ஐரிஷ் கால்வாயில் வருவதைவிட்டுப் பிரஞ்சுக் கரையை நோக்கிச் செல்வதுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/374&oldid=1626597" இலிருந்து மீள்விக்கப்பட்டது