உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
342

❖ மறைமலையம் - 3 ❖

இங்கிலிஷ் கால்வாயின் பக்கமாய்த் திரும்பினாள். அதன்பின்,தன் கையை நீட்டி ‘ஓ, இதோ பஞ்சுப் பொதிகள்; அங்குள்ளவர்கள் ஆ, எவ்வளவு பகடியான மக்களாயிருக்கின்றார்கள்; அவர்கள் இங்கிலீஷ் பேசவில்லை.’ உடனே, மார்ட்டன் மீகாமன் ‘நல்லது, அதுதான் தாமஸ் மீகாமனின் பிரன்ஸ்விக்’, என்றார். நியூஆர்லியன்ஸ் என்னும் பட்டினத்தின் துறைமுகத்தில் தமது கப்பலோடு நின்று கொண்டிருந்த அவ்வமெரிக்கர் கப்பல் தனக்குரிய பஞ்சுச் சரக்கை ஏற்றிக் கொண்டிருந்தது.

அப்போது தியடோர் தானுஞ் சரக்கேற்றிக்கொண்டு பிரஞ்சுத் துறைமுகப்பட்டினமாகிய ஹாவருக்குப் போவதாயிருந்தது. இங்ஙனம் அப்பெண்மகள் தனது தெளிவுக் காட்சியால், அறிந்து சொன்னவற்றைக் கேட்டு மன நிறைவு உடையவராய், மார்ட்டன் மீகாமன் தமது இல்லத்திற்குச் சென்று, உடனே தாமஸ் மீகாமனுக்கு எழுதிக் காணாமற்போன தமது சரக்கைப் பற்றிக் கேட்டார். சிறிது காலங்கழித்துப், பஞ்சுப்பொதி, உண்மையாகவே அங்கே உளவென்றும், அவை துறைமுகத்தினின்றும் பிசகாக எடுக்கப்பட்டனவென்றும், அவை எவர்க்கு உரியனவாய் இருந்தாலும் விற்பனை செய்தற்கு ஆயத்தமாயிருந்தன வென்றும் அவர்க்கு விடைவந்தது. ஆனால், மார்ட்டன் மீகாமன், அவை திரும்ப அனுப்பப்படுதற்கு ஆம் செலவு தொகையனுப்பினால், அப்பஞ்சுப்பொதிகள் உடனே அவர்க்கு அனுப்பப்படுமென்பதுந் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்ஙனமே செய்ய பிரஞ்சு நாட்டு ஹாவர் துறைமுகத்திலிருந்து ங்கிலாந்திலிருக்கும் இலிவர்ப்பூல் துறைமுகத்திற்கு வருதற்குரிய செலவு மட்டும் உடையனவாய் அப்பஞ்சுப் பொதிகள் உரிய காலத்தே அவரிடம் வந்து சேர்ந்தன. இவை தாம் உண்மையாக நிகழ்ந்தவை; ஆனால், அந்நிகழ்ச்சி யினியல்பை விளக்குதற்கு யான் புகவில்லை”. என்னும் இம்மெய்ச் செய்தியால், பன்னாட்களுக்குமுன் நெடுந்தொலைவிற் றவறிப் போன பொருள்களும் தெளிவுக்காட்சி யுடையாரால் எளிதிற் கண்டறியப்படும் உண்மை நன்கு நிலைபெறுகின்றதன்றோ?

இனி, நோயால் வருந்துவோரின் நோயின் இயல்பை அறியமாட்டாமல் தவிக்கும் மருத்துவர் அதனைத் திட்டமாய் அறிந்து கொள்ளுதற்குந் தெளிவுக்காட்சி பெரிதும் உதவி புரிவதாகும். உடம்பின் உள்ளே அமைந்த கருவிகளிற்றோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/375&oldid=1626598" இலிருந்து மீள்விக்கப்பட்டது