உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 24

பேய்கள் பேச்சுச் சிறுவர்களுக்கு எப்படி புரியும்! ஆயினும் ஒருவன் வெளிநாட்டுக்குப் போக விரும்பினான். அடுத்தவன் அவனை இவ்விடத்திலேயே காத்திருக்கும்படி கூறினான். முதல்வன் கையில் கொண்டுவந்த பயணப்பையை அங்கே விட்டு விட்டுச் சென்றான். பேய்களும் மனிதர்களைப் போலவே நடந்துகொண்டன.

சிறுவர்கள் இவ்வளவு செய்தியும் கேட்டார்கள். ஆயினும் அவர்கள் தாம் கண்டது பேய்களே என்று கருதிச் சென்றனர்.

கரை காவலன் எண்- 618

ஸென்ட் மலோவையடுத்த கடற்கரையெங்கும் கள்ள வாணிகக் காரரும் சமயச் சட்டங்கள், அரசியற் சட்டங்கள் ஆகியவற்றுக்குத் தப்பியவரும் ஓடிவிடாமற் காக்கக் கடற்காவற்காரர் அமர்த்தப்பட்டிருந்தனர். பொதுவாக அக்காலத்தில் எங்கும் இந்நிலைமை இருந்தது. சிறப்பாக ஃவிரான்சில் அரசியலும் சமயமும் மக்கள் வாழ்வின்மீது இன்ன சமயம் என்றிராது விழும் இடி மின்னல்களாகவே இருந்தன. கத்தோலிக் கராயிருந்தால் ஒரு அரசாங்கத்துக்கு அஞ்ச வேண்டும். மற்றொரு அரசாங்கத்துக்கு அஞ்சவேண்டும். பலர் இரண்டுக்கும் தப்பிப் பிழைக்கவேண்டும். ஃவிரஞ்சுப் புரட்சிக்கால முதல் அரசியல் கட்சிகளும் கொள்கைகளும் சமயத்தைப்போல் மக்களைப் பிரிவினைசெய்து அலைக்கழித்தன.

புரோட்டஸ்டாண்டாயிருந்தால்

இத்தகைய வாழ்விலிருந்து தப்பியோடியவர்கள் பலர். தப்பியோடிய வர்கள் அமைத்த நாகரிகங்கள்தான் புதிய அமெரிக்காவை வளர்த்தது.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமய அகதிகள், அரசியல் அகதிகள், கள்ள வாணிக அகதிகள் ஆகியவர்கள் தப்பிப் பிழைத்தோடாமல் காக்கவே கடல் காவலர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தப்பியோடுபவர்கள் நேரே கப்பலில் ஏறாமல், கடற்கரை யிலுள்ள பாறைகளிலிருந்து படகில் சென்று கப்பலேறுவர். இதைத் தடுக்கும் எண்ணத்துடன் ஸென்ட்மலோவை அடுத்த பாறையொன்றின்மீது கரை காவலன்- 618 நின்றிருந்தான். அவன் தொலை நோக்கி

வழியாக வெளிநாடு புறப்பட்ட