உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

திட்டமும் ஏற்பாடும்

அப்பாத்துரையம் - 24

தான் மேற்கொண்ட வேலையை வேறு எவரும் செய்ய முடியாது என்பதையோ, அதற்குத் தன்னைத் தூண்டிய பரிசு வேறு எவரையும் தூண்டியிருக்க முடியாது என்பதையோ, கில்லியட் அறியமாட்டான். அறிந்தால் டூவ்ரேயே அடைய அவசரப்பட்டிருக்கவேண்டியதில்லை. கரையோரமான நேர் குறுக்கு வழியில் வந்திருக்க வேண்டியதுமில்லை. எவரும் தனக்கு முன்சென்று பரிசுக்குப் போட்டியிடக்கூடாதே என்று கவலைப்பட்டிருக்க வேண்டியதுமில்லை. அத்துடன் தன் அவசரத்தில் அவன் தன் பாரிய வேலைக்குரிய கருவிகளையும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட வெறுங் கையுடனேயே வந்தான். நல்ல காலமாக அவன் கப்பலில் எப்போதும் இருந்து வந்த சில ஆயுதங்கள் அவன் எடுக்காமலே அதில் கிடந்தன.

டூவ்ரேயின் இருவரிசையான பாறைகளில் வலப்புறப் பாறை பெரிது. இடப்புறம் சிறிது. அவற்றின் இடைவெளி ஒரு இருபது இருபத்தைந்தடி அகலமேயிருக்கும். டியூரான்ட் பொங்கிவரும் கடலில், புயலின் வேகத்தில் தொலைவிலிருந்து வானவெளியி லேயே தூக்கி எறியப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது பாறை வரிசைகளின் உச்சியை அடுத்த இடைப் பள்ளத்தில் உத்தரம்போல மாட்டிக்கிடந்தது. ஷீட்டீல் கப்பல் மீகாமன் கூறியபடியே இயந்திரம் ஒரு சிறிதும் உருக்குலையாமல் இருந்தது. ஆனால் கப்பலின் நடுச் சட்டம் தவிர மற்றப் பகுதிகள் நொறுங்கியும் முறிந்தும் கடலில் வீழ்ந்து போயிருந்தன. இயந்திரத்தின் புகைப்போக்கி அந்தரத்தில் நீண்டிருந்தது. துடுப்புக் கட்டைகள் சிறிது தாழ்ந்திருந்தாலும், பெருவாரி சேதமடையாமல் இருந்தன.

பல பாரக்கல் எடையுடை இயந்திரத்தைக் கீழே எப்படி இறக்குவது? அச்சட்டத்திலிருந்து எப்படி பெயர்ப்பது? இவற்றைச் செய்யக் கருவிகள் வேண்டுமே! உளி, சுத்தி, ஆணிதிருகி, முடுக்கி, ஆணிகள், பணிமரங்கள் இரும்பு

கியவற்றுக்கு எங்கே போவது? இவ்வளவும் செய்ய ஓராள் போதுமா? எத்தனை நாள் பிடிக்கும்? உணவுக்கு என்ன செய்வது, குடி தண்ணீருக்கு எங்கே போவது? காற்றுக்கும் மழைக்கும்