(170)
அப்பாத்துரையம் - 24
எடுத்திருக்கவும் கருத்தலைகள் எழுந்து ஒன்றோடொன்று மோதின. இறுதியில் என் ஐயம் உறுதியாக உருவெடுத்தது. டேவிட்டிடம் இது சம்பந்தமாகக் குறிப்பாகக் கூறினேன். அவன் நான் கூறிய சிறு சிறு குறிப்புரைகளைப் புரிந்து கொள்ளவில்லை. வேண்டுமென்றே உணராதது போல் நடிக்கின்றானோ என்று மீண்டும் ஐயுற்றேன். அவன் நட்பை உதறித்தள்ளிவிட்டு நகர்ந்தேன். அவன் பொருட் படுத்த வில்லை. இதுவும் என்னைப் புண்படுத்திற்று. அவன் நட்பிலும் தற்சார்புடையவன் என்று எண்ணிப் பார்க்கச் சக்தியற்றவனாயிருந்தேன். ஆனால் ஒருநாள் தற்செயலாக அதுபற்றிய உண்மையை நான் உணர்ந்துகொள்ள நேர்ந்தது.
கூடும்! இவ்வாறு என் உள்ளத்தில்
உண்மையில் எங்கள் இரகசியத்தை அறிந்த மற்றொருவன் இருந்தான். அவனே வாஸிலி என்ற எங்கள் அயல்வீட்டு வேலையாள். அவன் பெருங்குடியன்; பெண் பசப்பன். அவன் ஒருநாள் தேறல் விடுதியில் வயிறு முட்டக் குடித்துவிட்டு, விடுதி நங்கை ஒருத்தியுடன் எல்லாவற்றையும் உளறிக் கொட்டிக் கொண்டிருந்ததை நான் கேள்விப் பட்டேன். நாங்கள் கடிகாரத்தைப் புதைத்தபோது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு அதை அவன் எடுத்து மறைத்து வைத்திருக்கிறான்.
வீணாக டேவிடை ஐயுற்றது எனக்குச் சுருக்கென்றது. டேவிடிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு செய்தியை அவனிடம் விளக்கினேன். மன்னிக்க எதுவுமில்லை என்று டேவிட் கூறிவிட்டான். ஆனால் செய்தி முழுவதும் கேட்டபின் அவன் சீறிவிழுவான் என்று நான் எதிர்பார்க்க வில்லை. “ஆகா, இவ்வளவுக்கு ஆய்விட்டதா? இதைச் சும்மா விடக்கூடாது. அந்தப் பயலைக் கொன்றாவது நாம் கடிகாரத்தைத் திரும்பப் பெறவேண்டும்” என்று புறப்பட்டுவிட்டான்.
எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. திருட்டுப் பொருளைத் திருடியவன் மீது இப்படி வெளிப்படையாகச் சீறி என்னபயன் என்று மலைத்தேன் ஆனால் வேறு வழியின்றி டேவிடைப் பின்பற்றிச் சென்றேன்.
டேவிட் நான் போவதற்குள் வாஸிலியைப்பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான், கடிகாரத்தைக் கொடுக்கிறாயா அல்லது உன்னைக் குத்திக்கிழிக்கட்டுமா என்று என்னிடம் உரத்த குரலில்