உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

171

“அலக்ஸி, போய் என் கத்தியை எடுத்து வா" என்று முழங்கினான். உலுக்குவதுடன் நிற்கவில்லை; அடி உதையும் விழுந்தன.

வாஸிலி அலறித் துடித்துக் கடிகாரத்தைத் தர ஒத்துக்கொண்டான். சொன்னபடியே கடிகாரமும் வந்து விட் து.

66

நான் இன்னும் எதுவும் பேசக்கூடிய நிலையில் டேவிட் இல்லை. ஆயினும் மேலே செய்யவேண்டியது பற்றிப் பேசினான். "இந்தக் கடிகாரத்தை இனித் திரும்ப மீளாத இடத்துக்கு அனுப்பவேண்டும். எனக்கு ஒரு புது எண்ணம் தோன்றுகிறது. பஞ்ச உதவிக்காக அரசியலார் பணம் மட்டுமன்றி, பல்வகைப் பொருள்களும் பெற்றுக் கொள்கிறார்களாம். அவ்வகையில் இதையும் சேர்த்து அனுப்பிவிடுவோம். மாகாண முதல்வருக்கு ஒரு மனு எழுது” என்றான்.நான் போய்த் தாளும் மைக்கோலும் கொண்டுவந்து எழுதத் தொடங்கினேன்.

இதற்குள் எங்களைச் சுற்றிலும் பேரிரைச்சல் எழுந்து விட்டது. அத்தையின் குடிபடைகளும் தந்தையும் வந்து எங்களை வளைத்துக் கொண்டனர். அத்தை என்மீது வசையம்புமாரி பொழிந்து கொண்டிருந்தாள். டேவிட் கையில் கடிகாரம் இருப்பதைக் கண்ட தந்தை “அட திருட்டுப் பயல்களா! உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். முதலில் கடிகாரத்தை இங்கே ஒப்படைத்து விடுங்கள்” என்றார்.

அதுமுதல் டேவிட் செய்த ஒவ்வொரு செயலும் நான்மட்டுமல்ல, அங்குள்ளோர் எவரும் எதிர்பாராதவையா யிருந்தன. அவன் கடிகாரத்தைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஊடத்தொடங்கிவிட்டான். பலகணி வழியாகத் தாவிக் குதித்துத் தோட்டத்தைக்கடந்து தெரு வழியாக ஓடினான் நானும் ஒன்றும் தோன்றாமல் அவன் பின்னால் ஓடினேன்.

ஏதோ பித்துப் பிடித்தவர்கள் போல இருவரும் ஓடினோம். எங்களைப் பின் தொடர்ந்து அத்தையின் படை குடியும் தந்தையும் திருடரைத் துரத்தும் காவலர்போல, 'திருட்டுப் பயல்கள், பிடி, அடி' என்று கூவிக்கொண்டு ஓடிவந்தனர். தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. நடமாடியவர்கள் எங்கள் ஓட்டத்தின் வேகத்தைக் கண்டு திடுக்கிட்டு முதலில் விலகினர். பின் துரத்துபவர்களுடன் சேர்ந்துகொண்டு எங்களைத்