194
அப்பாத்துரையம் - 24
வாழ்க்கை ஓடம் மீண்டும் சிறகு விரித்துச் சென்றது. ஒடெஸ்ஸாவில் சென்று சில காலம் இன்பமாகக் கழிக்கத் திட்டமிட்டான். வழியில் ஒரு புகைவண்டி நிலையம் வந்ததும் அவன் மனம் அதிலிருந்து அடுத்த புகை வண்டிச் சந்திப்புக்குத் தாண்டிச் சென்றது. அச்சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப்பாதையில் சென்றால், இன்பப் பயணத்தின் இனிமை யிடையே மற்றோர் இன்பத் தடங்கல் ஏற்படுத்திவிடலாம் என்று அவன் எண்ணினான். அங்கே அவனிடம் நேசங்கொண்ட ஒரு சல்வமாது இருந்தாள். அவள் அவனை அடிக்கடி அழைத்ததோடு அவன் வரவுக்காக எதிர்பார்த்துக்கொண்டு மிருந்தாள்.திடீரென்று சென்றால், அவளுடன் பல நாள் இன்பப் பொழுது போக்கலாம். இவ்வாறு இருமுனை இன்பப் பொறியில் வெல்ச்சானினாவ் ஆழ்ந்து சிக்கியிருந்தான்.
உ
அவன் இருந்தது முதல் வகுப்பு வண்டி. மூன்றாம் வகுப்பு வழிப் போக்கர் ஆற்று வெள்ளம் போல் வந்து கொண்டும் போய்க்கொண்டு மிருந்தனர். இரண்டாம் வகுப்பிலிருந்த, பகட்டான ஆடையுடுத்திய ஓர் அழகி தன் உறவினனாகிய ஓர் இளைஞனைப்பற்றி இழுத்துக் கொண்டிருந்தாள். இளைஞன் குடி வெறியிலிருந்தான். இச்சமயம் குடித்திருந்த மற்றொரு வணிகன் முதலில் இளைஞனுடன் சண்டையிட்டு, அவன் பக்கம் பரிவு காட்ட வந்த அந்த அழகியையும் இரக்கமின்றிப் பிடித்திழுத்து அவ மதித்தான். அவள் எவ்வளவோ கெஞ்சியும் யாரும் உதவ முன்வரவில்லை. கணவன் பெயர் கூறி "மீதெங்கா, மீதெங்கா" என்று புலம்பித் துடித்தாள் அவள்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த வெல்ச்சானினாவ் குதித்தோடி வணிகனிடமிருந்து அவளை விடுவித்தான். அழகியும் இளைஞனும் அவனுக்கு நன்றி பாராட்டியதுடன், தம் வண்டிக்கு இட்டுச் சென்று உபசரித்தனர். சற்று நேரத்திற்குப் பின் கணவன் வந்தான். அவன் அவனை ‘மீதெங்கா' என்று அழைத்தாள். ஆனால் வெல்ச்சானினாவ் அவனைத் திரும்பிப் பார்த்தபோது, அவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டது. அவனே பாவ்லோவ்ஸ்கி! அவன் மனைவியும் வேறு யாருமல்ல. தான் தோழனாகச் சென்று பார்க்கப் போன நாடியாவே என்று உணர்ந்தான் நாடியா அவனை அடையாளமறியா விட்டாலும்