பிறமொழி இலக்கிய விருந்து -2
193
திருத்தும் துணிவில்லாமலும், அவன் போக்குக்கு உதவும் துணிவில்லாமலும் இருதலைப்பட்டு உழன்றான்.
வீட்டுக்குத் திரும்பி வந்த பின் பாவ்லோவ்ஸ்கி ஒரே ஒருநாள் இரவு வெல்ச்சானினாவின் வீட்டில் இருந்து குடித்து மகிழவேண்டுமென்று வற்புத்தினான். அது அவன் மணஉறுதி விழாவுக்கு அடுத்த நாள். ஆகவே வெல்ச்சானினாவ் இணங்கினான். வெல்ச்சானினாவிற்கு வழக்கமாக வரும் வயிற்றுவலி அன்றிரவு உச்ச நிலையடைந்தது. அதனால் அவன் நோவு பொறுக்க முடியாமல் புழுப்போலத் துடித்தான். பாவ்லோவ்ஸ்கி தன் பழைய கெட்ட குணம்யாவும் மறந்து அவனுக்குத் தக்க மருந்து கொடுத்தும், நோய் முற்றிய சமயம் அவன் உயிர் காக்கும் நண்பனாயிருந்து பேணியும் உதவினான். வெல்ச்சானினாவும் பழமையை மறந்து அவனிடம் நன்றி கூறத் தொடங்கினான். ஆனால் நோவு நீங்கி அவன் தன்னை மறந்து தூங்கும் போது மீண்டும் கறுப்பு நாடாபற்றிக் கனவு கண்டான். கனவினிடையே பாவ்லோவ்ஸ்கி தன் கழுத்தை அறுக்க வருவதாகக் கனவு கண்டு அலறி விழித்தான். விழித்தபோது பாவ்லோவ்ஸ்கி உண்மையிலேயே ஒரு கத்தியுடன் அவன் மீது பாய்ந்து வருவது கண்டான். திடுமென அவன் உடலில் மின் ஆற்றல் பாய்ந்த உணர்வு தோன்றியது. அவன் எதிரி கையைப் பலமாகப் பற்றி உயிருக்குப் போராடினான். நெடுநேரம் போராடியபின் வெல்ச்சானினாவ் பாவ்லோவ்ஸ்கியின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி எறிந்துவிட்டு அவனை அடக்கினான்.
பாவ்லோவ்ஸ்கி இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அப்பாற் சென்று விட்டான். இனி பாவ்லோவ்ஸ்கி வந்து தன் வாழ்நாளில் குறுக்கிட மாட்டான் என்றே வெல்ச்சானினாவ் நினைத்தான்.
ஆனால் இரண்டாண்டுகளுக்குப் பின் எதிர்பாராத வகையில் மீண்டும் அவன் பழைய நாடகத்தைத் திருப்பிப் படித்தான்.
வெல்ச்சானினாவ் நூறு ஆயிரமாகக் கொடுத்துத் தன் பழைய வழக்குக்கு ஒரு முழுக்குப் போட்டிருந்தான். நாடோடி வாழ்வை இப்போது அவன் விட்டு விட்டான். பழைய இன்ப