உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

(203

வருந்தித்தான் முன்னுக்கு வந்தேன். அவளும் அப்படியே தான் என்னை உணர முடியும் என்று நான் கருதினேன்.

என் தேர்வு கடுந் தேர்வு. நான் புடமிட்டேன், தங்கமா என்று பார்க்க. அந்தோ, தங்கத்தினும் விலை மதிப்பேறிய ஒப்பற்ற மணியைச் சுட்டெரித்தேன்!

என் பேரில் குற்றமில்லை. மணநாளுக்கு முன்பே அவள் அடகுக் கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டிவரும் என்று நான் கூறியிருந்தேன். அவள் மறுக்கவில்லை. ஆடையணி, வீட்டு இன்பப் பொருள்களில் நான் மிகுதி செலவிடவில்லை. ஆனால் இதுவும் அவள் நன்மையை எண்ணித் தான்! மூன்று ஆண்டுகளில் முப்பதாயிரம் வெள்ளி ஈட்டி வைத்து விடுவதென்று நான் தீர்மானித்திருந்தேன். இதை அவளுக்குச் சொல்லவில்லை. இதன் மூலம் அவளுக்குத் திடீரென்று களிப்பூட்ட எண்ணியிருந்தேன்.

மணமாகுமுன் நாடகத்திற்கே நான் அழைத்துச் செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தேன். அவளும் கேட்பதில்லை. ஆனால் நானாக மாதம் ஒரு தடவை இட்டுச் சென்றேன்.

எங்களிருவரிடையே சண்டை, சச்சரவு, வாக்கு வாதம் இல்லை. ஆனால் பேச்சுக் குறைவு. ஒரே மௌனம்! அவள் உள்ளத்தில் முதலில் தளர்ச்சியும், பின் கிளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட முடியாதென்பதில்லை. ஆனால் இது அவள் பயிற்சிக் காலம் வருங்காலம் இதன் பயனைத் தராதிராது.

அவள் எதிர்த்துப் பேசாவிட்டாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வாள். ஏளனக் குறிப்புக் காட்டுவாள். அவளாக அறியும் காலம் அறியட்டும் என்று ஆண்மையுடனும் பொறுமையுடனும் இருந்தேன்.

அவள் காதலைப்பற்றி எனக்கு ஐயமே இல்லை. அது என் புலத்துப் பயிர்! நான் பொறுத்திருந்து அதை மலர்வித்துக் களிக்க முடியும் என்றிருந்தேன்.

அந்தோ!

அவள் முதலில் என் ஆணை மீறினாள். முப்பது வெள்ளிக்கு வைத்த பதக்கத்தை மாற்றி எட்டு வெள்ளி கூடப்பெறாத