உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218) |_

||--

அப்பாத்துரையம் - 24

""

எனக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் இல்லாமலில்லை என்று அஸோஜிரோ இணக்கம் தெரிவித்தான்.

ஜப்பானியப் பெண்கள் தங்கள் இன்பப் பொருள்களுள் ஒன்றாக அழகிய விசிறி ஒன்றை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். பொற்பூ வேலைகள் நிரம்பிய அத்தகைய விசிறி ஒன்று மியூகியிடமும் இருந்தது. அதை அவள் தன் கையில் வைத்துக் கொண்டு மெல்லத் தன் முகத்தின் மீது வீசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரும் சிறிதுநேரம் இன்னது பேசுவது என்றறியாமல் வாளா இருந்தனர். பின் மியூகி பேச்சுத் தொடங்கினாள். அவள் பேச்சு இயல்பாகவே அஸோஜிரோவின் பாடலைப் பற்றி எழுந்தது.

அவள் அதன் இனிமையைப் புகழ்ந்து விட்டு, "இத்தகைய இளங்கவிஞரைச் சந்தித்ததற்கு மகிழ்கிறேன். இந்நாள் என்றும் என் நினைவிலிருக்க வேண்டும்" என்று கூறி ஒரு பெருமூச் செறிந்தாள்.

66

'அம்மணி, நானும் அப்படித்தான் எண்ணுகிறேன். என் மனமும் இன்றைய நிகழ்ச்சியை என்றென்றும் எண்ணி மகிழவே விரும்புகிறது" என்று அஸோஜிரோ தன் ஆவலை ஒலி பரப்பினான்.

66

"அப்படியானால் இதன் நினைவுக்குறியாக, நிகழ்ச்சிச் சின்னமாக, இவ்விசிறியில் தங்கள் குறிப்புரை ஏதேனும் ஒன்று எழுதித் தருவீர்களா?” என்று அன்புக் கோரிக்கையிட்டாள் மியூகி.

என் இதயத்தையே எழுதித் தருகிறேன்' என்று அஸோஜிரோ வெளிப்படக்கூறவில்லை.ஆனால் உள்ளம் இப்படிக் கூறிற்று. அவன் அவ்வழகிய விசிறிக் கேற்றவாறு தன் காதல் உள்ளத்தை ஓர் அழகிய பாடலாக வார்த்து உருவாக்கினான்.

அவன் கவிதையார்வம் தென்றலையும் தன் உள்ளத்தில் புதிதாக எழுந்து அலையோடி நிற்கும் காதலையும் மகிழ்ச்சியை யும் குழைத்து ஒரு மாயப் பாடலைத் தோற்றுவித்தது.