உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(280

அப்பாத்துரையம் - 24

செல்வனாவான். அதேசமயம் தற்பற்றற்றவனிடம் வறுமைகூட அவனது அகச்செல்வமாகிய செவிலியை ஒரு சிறிதும் ஊறுபடுத்த முடியாது.

உண்மையான செல்வம் அகச்செல்வம். அதுபோல உண்மையான வறுமை அகவறுமையே. இவ்வறுமையின் இருவகைகளையே அகச்செல்வமற்ற ஏழையும் செல்வரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏழையின் அகவறுமை மிடிமை என்றும் செல்வரின் அகவறுமை மடிமை என்றும் உலகில் வழங்குகின்றன. இரண்டும் இயற்கைக்கு மாறான அகக் குழறுபடியின் விளைவுகள். மிடியன் புறவறுமையை வெறுத்தாலும் அதை நீக்கும் முயற்சிகளிலீடுபடாமல் அகவறுமையையும் விலைக்கு வாங்குகின்றான். செல்வத்தினிடம் அவன் கொள்ளும் மட்டிலாப் பற்றும் அங்கலாய்ப்பும் காரணமாக அவன் மனிதரையும் மனிதப்பண்புகளையும் வெறுக்கிறான். வெறுப்பு வெறுப்பை வளர்த்து, ஏளனத்தை உண்டு பண்ணுகிறது. மடியனோ தன்செல்வத்தின் உண்மைப் பயனறியாமல், சோம்பல் வாழ்விலும் மட்டற்ற இன்ப வாழ்விலும் அதை ஈடுபடுத்தித் தன்னை விலங்காக்கிக் கொள்கிறான். உடல்நலம், உளநலம் ஆகிய இரண்டும் அவனை விட்டகல்கின்றது. அவன் புறச்செல்வம் அவனைப் புதைக்கும் செல்வமாகவே அமைகிறது.

(நல்வாழ்வை ஒழுங்குபடுத்தும் உள்அமைதிப் பண்பைக் கண்டபின்பே மனிதன் மனிதனாகிறான். அவ்வமைதிக்கேற்பத் தன் உள்ளத்தையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டபின், அவன் தன் வாழ்வின் குறைபாடுகளுக்காக எதையும் அல்லது எவரையும் குறைகூற வேண்டிய நிலை ஏற்படுவதில்லை.) தன்னை வளர்த்துத் தன் சூழலையும் வாழ்வையும் வளர்ப்பதுடன் நில்லாமல், அவன் பிறருக்கும் வளர்வதற்கான, சூழல்களை அமைத்து வழிகாட்டுகிறான். ஓருடலில் வளர்ந்து அதைக்கூட இயக்கமாட்டாது அதற்கு அடிமைப்படும் மாவிலங்குகளையும் மனித விலங்குகளையும் போலன்றி, அவன் தன்னுடலையும் பிற பல உடலங்களையும் உயிர்களையும் வாழ்வுகளையும் இயக்கி, இயற்கையின் செல்வனாகவும், உலகின் ஒரு சிறிய இறைவ னாகவும் இயங்குகின்றான். அவன் கருத்தும், வாழ்வும் இறைவன் எல்லையாகிய முழுநிறை செம்மையை நோக்கி என்றும் வளர்ச்சியுறுகின்றன.