உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

நூலுரை

“உடலின் அழகினும் உள்ளத்தின் அழகே உயரழகு என்பதை நயமுற விளக்கும் அடிகள், இருவகை அழகும் ஒருங்கே அமைந்திருத்தல், அழகு மங்கை அணிகலம் பூண்ட தொக்கும் என்கிறார்.

முனிவர்

மன ஒருமைப்பாடே, 'மனக் கவர்ச்சி'யின் அடிப்படை என்பதை, ஓவியம், இசை, புலமையர் பா என்பவை படிமான வளர்ச்சியாய் அமைதலை விளக்கி இறைமையோடு ஒன்றும் நிலைக்கு உயர்த்துகிறார். முற்றும் உணர்ந்த இவ்வுலகங்களையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் ஒரு பொருட்டாக நினையாது திருவருள் ஒளியிலேயே தமது அறிவைத் தோய்த்து அதனை நோக்கியவாறாகவே நிற்கும் உள்ள ஒருமையினும் பெரியது வேறுண்டோ? என வினவுகிறார்.

நினைவை ஒருவழி நிறுத்தும் நிலையை விரிய விளக்கி, குதிரைபோலவும் குரங்கு போலவும் ஒரு நிலைப்படாது சுழலும் மனத்தை ஒருவழியிலே நிலைப்பித்தல் வேண்டும் என்கிறார்.

ஐம்பொறிகளும்

கருவிகளே. உயிருக்கு உதவியாம் பொருட்டு அமையப் பெற்றவை. இக்கருவிகளைப் பயன்படுத்தும் வகை நன்கு அறிந்தவன் அவற்றால் நலம் பெறுவான். பயன்படுத்தும் வகை தெரியாதவன் அவற்றால் நலம் பெறான். இங்ஙனம் இல்லாமல் அக்கருவிகளே ஒருவனுக்கு நன்மையைத் தருதலும் தீமையைத் தருதலும் சிறிதும் இல்லை எனத் தெளிவிக்கிறார்.

கண்ணின் சிறப்பை விரித்துக் கூறி, அக்கட் பார்வையை நிலையுறுத்தத் தக்க பயிற்சியை எளிமையாக விளக்குகிறார். கண்ணாடியில் வரைந்த நாரத்தம் பழத்தை நோக்க வைத்து, கடுகளவு நோக்கும் பயிற்சியை விளக்குகிறார்.

உற்றுப் பார்த்தல், உறுத்துப் பார்த்தல் ஆகிய ரண்டன் வேறுபாட்டை நயமாக விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/29&oldid=1575981" இலிருந்து மீள்விக்கப்பட்டது