உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறைபொருளியல் - 2

xxix

காதல் மனைவியைக் கண்முன் இருக்க வைத்து, காலைத் துண்டிக்கும் சான்றையும், மக்களினும் தாழ்ந்த சில உயிரிகளும் கூடப் பிற உயிர்களை, உற்றுப் பார்க்கும் தம் கட்பார்வையின் வன்மையினால் தன் வயப்படுத்துதலையும் விரிக்கிறார். 'கட்செவி’ எனப்படும் பாம்பு இக்கவர்ச்சித் திறத்தில் மேம்பட்டிருத்தலைப் பலப்பல சான்றுகளால் நிலைப்படுத்துகிறார். 'எண்ணம்' என்னும் பகுதியில் கண்ணேரில் நாம் காணும் வழிவழிக் காட்சியைக் காட்டி அடிகள் விளக்குகிறார்.

ஓர்

நீர்க்குடத்தைத் தலைமேல் சுமந்து செல்லும் வெற்பெண் தன்தோழிமாரொடு சிரித்து விளையாடிப் பேசிக் காண்டு கைவீசிச் சென்றாலும் அவளது எண்ணமெல்லாம் தலைமேலுள்ள நீர்க்குடத்தின் மேல் நிலைபெற்று நிற்றலைக் கூறுகிறார்.

மனம், அறிவு, நினைவு, உணர்வு, எண்ணம் என்பவற்றை விளக்குகிறார். எண்ணத்தை வலுப்படுத்துதலுக்கு, அறிதுயிலில் விளக்கிய மூச்சுப் பயிற்சியைக் கூறித் தெளிவிக்கிறார்.

கடைக்குப் பொருள் வாங்கச் செல்லும் சிறுவர்க்கு ‘இன்ன பொருள் வாங்கி வருக எனின், அதனை மீள மீளச் சொல்லிச் சன்று அப்பொருளை ள வாங்கி வருதலைக் காட்டி, உருவேற்றுதலாம் மந்திர மொழியை எளிதில் விளக்குகிறார். தால்காப்பியர், திருவள்ளுவர் திருமூலர் வழியாக மந்திர மொழியை விளங்க வைக்கிறார். தாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உருவேற்றின் அவ்வுருவேற்றம் நிறைவேற்றமுறும் என்கிறார். மன் + திரம் = மந்திரம் : இயன்+ திரம் : இயந்திரம் ஆவது போல என்பார் பாவாணர்.

=

'வசியச் செயல்கள்' எனக் கடிதம் எழுதுதல், பொருள்களைத் தூயதாகவும் ஒழுங்கு முறையிலும் வைத்தல், நேர்காணல், உரையாடல், தோற்றம், அகமும் புறமும் ஒத்தல், உள்குதல் எனப்பகுத்துக் கொண்டு சான்றுகள் காட்டிக் காட்டி விளக்குகிறார்.

ஒருவர் தாம் முன்னைப் பழகி இருந்த இடம் பொருள் முதலியவை காண்டு கவர்தல், 'சேர்க்கைப் ாருள் கவர்ச்சியாம். கவர்ச்சிக்கு ஏற்ற காலம் நள்ளிரவின் நடுயாமம் என்கிறார்! பிறரெல்லாம் தம்மை மறந்து உறங்கும் நேரம் அஃதாகலின் பயன்விளை காலம் அது என்கிறார். நடுயாமத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/30&oldid=1575982" இலிருந்து மீள்விக்கப்பட்டது