உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

9

இறக்குங் காலத்தேனுந் தாந்தொகுத்த பொருளில் ஒரு தினையளவாவது அவர் எடுத்துக் கொண்டு போகவல்லராவரா? “காதற்ற ஊசியும் வாராதுகாண் நின்கடைவழிக்கே” என்ற பட்டினத்து அடிகள் திருமொழியின் உண்மையைச் சிறிதாயினும் நினைத்துப் பாருங்கள். மைைலயளவாகக் குவித்த பொருளும் ஒருவனிடத்தே மட்டும் நிலையாக இராது. அஃது இன்றைக்கு ஒருவன் கையிலும் நாளைக்குப் பிறனொருவன் கையிலுமாக இங்ஙனம் மாறிமாறிக் கொண்டே போகும். மக்களுக்குப் பொருள் ஈட்டும் முயற்சியில் அறிவு செல்வதுபோல, மற்றவற்றில் அறிவு செல்வதில்லை. உயிரோடிருக்குங்காறும் பொருளினாற் பெறும் பயன்கள் பலவாயிருத்தலால், அவ்வளவு பயன்றருவதான பொருளை ஈட்டுவது குற்றமென்று யாஞ் சொல்கின்றிலேம். பிறர்க்குத் தீங்கில்லா வழிகளில் அதனைத் திரட்டுவதுதான் இப் பிறவிக்கும் மறுபிறவிக்கும் நன்மையைத் தருமாதலால், அவ்வாறு செய்ய வேண்டுமென்பதே நமது கருத்தாகும். மேலும், இந்த மக்கட் பிறவி எடுத்தது எதற்காக என்று சிறிதாயினும் எண்ணிப் பார்த்து, இப் பிறவியைப் பயன்படுத்துதற்கான முயற்சிகளைத் தேடாமற், பொழுது விடிந்து அந்திபடும் வரையிலும் பணமோபணம் என்று அலைவதைக் காட்டினும் வேறு இழிந்தது யாது இருக்கின்றது? மேலும், ஒருவன் தனக்கு இன்றியமையாத குறைகளை நீக்கும்பொருட்டு வேண்டிய அளவுக்குப் பாருள் தேடவேண்டுமேயல்லாமற் பொருளையே பெரிதா எண்ணி அலைவது சிறிதுந் தக்கதன்று. உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும், இருக்க வீடும், மனைவி மக்களைப் போற்றத்தக்க வருவாயும் இருந்தாற் போது மன்றோ? இவ்வளவு வசதிகளையும் பெறுவதற்குப் போதுமான பொருள் ஒருவன் ஒரு பகலிற் பாதிநாள் நல்வழியே முயன்றால் இனிது பெற்று இன்புறலாம். போதுமான அளவுக்குமேற் பொருளைத் தேடி வைத்து, அதனைக் காப்பாற்றுதற்குப் படும் வருத்தஞ் சிறிதன்று. மேலும், இப்பொருளின் தேட்டத்தைக் கண்டு மனைவி மக்கள் மிகச் செருக்குற்று, “எமக்கு இத்தனை பொருள் இருத்தலின் எமக்கு யாது குறை? எமக்கு யார் நிகராவர்?” என்று நினைத்து, நற்குணங்களின்றிப், பலரும் வருந்த ஒழுகிக் கடைசியில் அப்பொருளையும் அழித்துச் சோம்பேறிகளாய் அலைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/42&oldid=1575994" இலிருந்து மீள்விக்கப்பட்டது