உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

புறப்பொருள்களிடத்து

39

அளவிறந்த பற்று வைத்து நடத்தலேயாம். பற்ற வைக்க வைக்க மனம் ஒரு சிறிதும் உயிரின் வழிப்படாது ஓடும். ஆகவே, பற்றுவைத்தலைச் சிறிது சிறிதாக ஒழித்தால் அதன் முரட்டுத் தன்மையும் படிப்படியாய்க் குறைந்துவிடும். பற்றுதலை ஒழித்த அளவானே அதனை அகமுகமாகத் திருப்பிவிடலாமோ வென்றால், அதுவுங் கூடாது. புறப்பொருள்களிடத்தே ஓடிஓடிப் பழகிய அதனை எத்துணை தான் அகத்தே மடக்கினும், அது பின்னும் பின்னும் அப் புறப் பொருள்களையே நாடி ஓடும் பழக்கம் மிகக் கொடிது! ஆதலாற், பின்னை எங்ஙனந்தான் அதன் ஓட்டத்தை ஆற்றுவித்து மடக்கல் கூடும் என்றால், அஃது யாம் மேலெடுத்துக் கூறிய ‘பகுத்தறிந் தொழுகல்' என்னும் முயற்சியினாலேதான் எளிதிற் கைகூடற் பாலதாம் என்க.

இனி, மனம் என்னும் இவ்வகக்கருவி மேற்கூறியவாறு பலவகைப்பட்டு ஓடுதற்கு ஏது ஐம்பொறிகளேயாகும். கண்ணாற் காணப்பட்ட பொருள்களிடத்துஞ், செவியாற் கேட்கப்பட்ட பொருள்களிடத்தும், மூக்கால் முகரப்பட்ட பொருள்களிடத்தும், நாவாற் சுவைக்கப்பட்ட பொருள்களிடத்தும், மெய்யாற் றொடப்பட்ட பொருள்களிடத்துமாக மனம் பற்று வைத்து வைத்து நடக்கின்றது. இவ்வைம்பொறிகளும் இல்லையானால், மனம் பற்று வைத்து ஒழுகுதற்குச் சிறிதும் இடமே இல்லை. அவ்வாறாயின், இவ்வைம்பொறிகள் ஏன்றான் நம்முடம்பின்கண் அமைத்து வைக்கப்பட்டனவெனின், அவை இல்லையானால் நம் உயிரின் அறிவு சிறிதேனும் விளங்குதற்கு வகையில்லாமற் போம். அதுவானால், உயிரின் அறிவு விளக்கத்தின் பொருட்டு அமைத்து வைக்கப்பட்ட இவ்வைம் பொறிகள் பற்றுவைத் தொழுகுதற்கும் இட ஞ்செய்வதேன் என்றால், ஐம்பொறிகள் உயிருக்கு உதவியாம் பொருட்டே படைக்கப்பட்ட படைக்கப்பட்ட கருவிகள்.இக் கருவிகளைப் பயன்படுத்தும் வகை நன்கு அறிந்து அவற்றை ஆள்பவன் அவற்றால் நலம்பெறுவன். அவற்றைப் பயன்படுத்தும் வகை தெரியாதவன் அவற்றால் துன்புறுவன். இங்ஙனம் அல்லாமல் அக் கருவிகளே ஒருவனுக்கு நன்மையைத் தருதலுந் தீமையைத் தருதலுஞ் சிறிதும் இல்லை. அஃது எதுபோல வெனின்; செவ்வையாக வடித்துச் செய்யப்பட்ட கூர்ங்கத்தி

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/72&oldid=1576024" இலிருந்து மீள்விக்கப்பட்டது