உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் – 4

ஒன்று தொழிலாளி ஒருவன் கையிலிருந்தால் அதுகொண்டு அவன் பயன்படும் பல தொழில்களைச் செய்வான். அஃது அவன் கையிலன்றி ஒரு கொலைஞன் கையிலிருப்பின் அதனால் அவன் பல வுயிர்களைக் கொன்று தீங்கு இழைப்பன். இங்ஙனமே, ஐம்பொறிகளையும் பயன்படுத்தும் முறை

நாள்

தெரிந்து

ஆ ள்பவன் அவற்றால், அறிவு மிக விளங்கப்பெற்றுத், தன் அறிவை அகமுகமாகத் திருப்பி இறைவன் அருளிலே நிறுத்தி எல்லையற்ற பேரின்பத்தைப் பெறுவன். அம்முறை தெரியாதவனோ உள்ள உள்ள வரையில் உலகத் திற்கே அழுதழுது இறுதியிற் சொல்லற்கரிய பெருந் துன்பத்தில் ஆழ்குவன். ஆகவே, வ் வைம்பொறி களாலும் நுகரப்படும் பொருள்கள்மேற் சிறிதும் பற்று வைத்தல் இல்லாமல், இந் நுகர்ச்சிப் பொருள்கள் எமக்கு உரியனவாய் இருத்தல் போலவே உலகத்தின்கண் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவை பொதுமையில் உரியனவாகும் என்றும், நாம் பெற்ற இவைகொண்டு நமதறிவையும் நம்மோடொத்த எல்லாவுயிர்களின் அறிவையும் விளக்கி எல்லாம் இன்புறும்படி செய்யக்கடவேம் என்றுங் கருத்தில் ஊன்றி ஒழுகுதல் எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இத்தன்மையவாகிய இப் பொறிகள் ஐந்தையும் பற்றுண்டாவதற்கு இடந்தராமற் பகுத்தறிந்தொழுகுதற்கு உதவி கிரம்படி பழக்கி, நினைவைச் சிதறவிடாமல் ஒருவழிப்படுத்தும் முறைகளை அடைவே விளக்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/73&oldid=1576025" இலிருந்து மீள்விக்கப்பட்டது