உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

49

மற்றொருவர் கண்ணுள்ளே நோக்குதலாகும். இச்செயல் அமைதித் தன்மையின் பாற்பட்டு நடப்பது. உறுத்துப்பார்த்தல் என்பதோ சினங்கொடுமை பொறாமை பகைமை இணை விழைச்சு முதலான ஏதுப்பற்றி உள்ளம் நிலைகலங்கி இன்னா நோக்கத்தோடும் ஒருவர் பிறரொருவரை வெறித்துப் பார்த்த லாகும். இச் செயல் இழிந்த இயற்கையின்பாற் பட்டு நிகழ்வது. உறுத்துப் பார்க்கும் பார்வையே பிறருக்கு அருவருப்பையும் வருத்தத்தையும் வெருட்சியையும் உண்டாக்கு மேயல்லால் உற்றுப் பார்க்கும் இனிய பார்வை அவற்றை உண்டுபண்ண மாட்டாது. இது விருப்பத்தையும் அன்பையும் எழுப்பிப் பார்ப்பவர் பார்க்கப்பட்டவர் இருவரையும் அன்பிற் பிணிப் புண்ணச் செய்து பெருநலங்களைப் பிறப்பிப்பதாகும். அன்பிற் சிறந்த இருவர் ஒருவரையொருவர் அமைதியோடும் இனிதாக உற்றுப் பார்த்து அகம் மகிழும் நிகழ்ச்சியில் இவ்வுண்மையை வைத்துக் கண்டுகொள்க. எனவே, உற்றுப்பார்க்கும் இனிய நோக்கத்தைச் செவ்வையாகத் தெரிந்து பழகுமவர்க்குக் கைகூடாத தொன்றில்லையென்பது தெரிந்து கொள்ளற்பாற்று. இங்ஙனங் கண்களை இமையாமல் வைத்துப் பார்த்து அவ்வழியே தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுஞ் செயல் மக்களுள்ளும் மக்களினுந் தாழ்ந்த உயிர்களுள்ளுஞ் சிறுபான்மை இயற்கையாகவே நிகழ்ந்து வருவதுங் காணலாம். இதனைப் பின்னே எடுத்துக்காட்டுஞ் சில உண்மை நிகழ்ச்சி களினால் இனிது விளக்கிக் காட்டுவாம்.

6

தாலைவான தீவு ஒன்றிலுள்ள ஒருவகை மக்கள் ஒரு காலத்தில் தற்செயலாய் நிகழ்ந்த ஓர் இடரில் அகப்பட்டுப் பிழைக்க முடியாத காயம் அடைந்தார்கள். அவர்களுள் ஆண்டு முதிர்ந்த ஒரு கிழவனுக்குக் கால்முறிந்து போய் விட்டமையால் அதனை வெட்டியெடுத்துவிட்டு மருந்து கட்டல் வேண்டி யிருந்தது. அவனுக்கு மயக்கத்தை உண்டு பண்ணி அதனைச் செய்யவேண்டுமென்று புண் மருத்துவர் தெரிவித்தனர். அக் கிழவனோ அங்ஙனம் உணர்விழந்து கிடக்க இணங்காதவனாய்த் தன் மனைவியைக் கிட்ட அழைத்துத் தன்னெதிரே உட்கார்ந்து கொண்டு கண் இமையாமல் தன்னை அவள் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்படி கற்பித்தான். அவனது கட்டளைப்படியே அவனை அவள் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க, அப் பு புண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/82&oldid=1576034" இலிருந்து மீள்விக்கப்பட்டது