உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

4. &6001

எல்லா உறுப்புகளினும் மிக மேலானது கண்ணேயாகும். இதுபற்றியன்றோ முற்றறிவுள்ள கடவுள் நமது முகத்தின்கண் அதனை மேலான இடத்திலே அமைத்து வைத்திருக்கின்றார். கண்ணிற்குக் கீழ்ப்பட்ட இடங்களிலேதாங் காது மூக்கு வாய் முதலான உறுப்புகள் அமைந்திருக்கும் உண்மையை உற்றுப் பாருங்கள்! கண்ணின் வாயிலாகத்தான் நம் மன அறிவு மிகவும் புலப்பட்டுத் தோன்றுகின்றது. உள்ளே மனத்தில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளுங் கண்களிடத்தே தோன்றாமல் இரா. கண்களிற் காணப்படுங் குறிப்புகளைக் கொண்டு கட்புலனாகாத ஒருவன் உயிரின் இயற்கைகளை யெல்லாந் தெளிந்து கொள்ளலாம் என்பதனை இனிதுணர்ந்தே ஆசிரியர் திருவள்ளுவ நாயனார், குறிப்பறிதல்' என்னும் இயலை ல வகுத்துக் கூறினார்; பொய்யா மொழிப் புலவருங், “கண்ணிற் சிறந்த உறுப்பில்லையாவதுங் காட்டியதே" என்று மொழிந்தார். ஆகையால், நம் மனவறிவு மிக ஒன்றுபட்டு நடக்கும் வெளி உறுப்பான கண்ணை முதலிற் பழக்குதல் வேண்டும்.

6

பொதுவாக மக்கள் வாழ்க்கையிற் கட்பார்வையானது ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொருளை நாடி நாடி மாறிக் கொண்டேயிருக்கின்றது. இங்ஙனங் கட்பார்வை இடை விடாது மாறிக்கொண்டிருத்தலால், இதனோடு ஒன்றுபட்டு நடக்கும் மன அறிவும் இடை இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கின்றது. ஓரிடத்திலாவது ஒரு பொருளிலாவது கட்பார்வை முனைத்து நில்லாமல் எந்நேரமும் அசைந்து கொண்டேயிருத்தலால் அதன் வழிப்பட்ட மனமும் எந்நேரமும் அசைந்து கொண்டே யிருக்கின்றது. இப்படிப் பட்ட ஒழியா மன அசைவினால் மக்களுக்கு நினைவின் ஆற்றல் குறைந்து போகின்றது. எந்தப் பொருளையும் அவர்கள் செவ்வையாக நினைவு கூரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/74&oldid=1576026" இலிருந்து மீள்விக்கப்பட்டது