உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாருபாலா 113 ரன் எவ்வளவு இன்பமாகப் பேசுகிறான். அவள் எவ்வளவு மயக்கும் பார்வையை வீசுகிறாள். தனியாகத்தானே இருக்கி றோம் என்று அந்த இளங்காதலர்கள். இப்படி விளையாடு கிறார்களோ! அடே, அடே! எத்தனை தடவைதான் அந்த எழிலரசியை இழுத்திழுத்து மடியில் சாய்த்துக் கொள்வது: கொஞ்சம்கூட உனக்கு இரக்கம் காணோமே. அப்பப்பா! போதும்! போதும்! என்று அந்தப் பாவை கூறக் கூற, 'உஹும்! உஹும்!' என்று கொஞ்சிக் கொஞ்சி அந்தக் கொவ்வை இதழைக் கொத்துகிறானே, இந்தக் கொடியவன்! அட பாதகா! இப்படியா இந்த இளமங்கையை இறுகத் தழு விக் கொள்வது? மூச்சுவிட முடியாமல் திணறுகிறாளே அந்த மோகனாங்கி பைத்யக்காரப் பெண்ணே! அவன் உன்னை இந்தப் பாடு படுத்துகிறான்; நீ கலகலவெனச் சிரிக்கிறாயே! பேதைப் பெண்ணே! ஆம்! அதுதான் சரி... கண்களை மூடிக் கொண்டாயா... நல்லது.. உறங்கு.. மெல்ல மெல்ல உறங்கு ...இன்ப நினைவுகள் உனக்குத் தாலாட்டாக அமைந்து விட்ட நிலையல்லவா! இனி உறங்கு.. அட, வெட்கமற்ற வனே! என்னடா இது.அவளுடைய பாதத்தை வருடுகிறாயே! செச்சே! ஆண் சிங்கம்! வீட்டின் தலைவன்! என்றெல்லாம் பெருமை பேசுகிறார்கள். இங்கு என்னடா என்றால், இலன், அவள் பணிக்கா முன்பு பாதம் வருடுகிறான்-- பளிங்காலான பதுமைக்கு தங்கத் தகடு உடுத்தி வைத்திருக் கிறது என்று சொல்லும்படி இருக்கிறது இந்தக் காட்சி! இந்த வாலிபன், கைதேர்ந்த சிற்பி; தான் சமைத்த சிற்பத் தின் கலை அழகை இங்கும், அங்கும், எங்கும், கன்னத்திலும் நெற்றியிலும், கதலித் தொடையிலும், மின்னல் இடையிலும் கண்டு கண்டு பெருமிதம் கொள்வது போலல்லவா இருக்கி றான்! டாக்டராமே இவன்! உடற்கூறு தெரிந்தவன்! நோய்க்கு மருந்தளிக்க வேண்டியவன், இதோ நோயூட்டு கிறான்! என்று கூறி ரசித்திடுவதுபோல, வெண்ணிலவு காட்சி அளித்தது. டாக்டர் இரகுராமன் அண்ணாந்து பார்த்தல்ல. மடியில் சாய்த்தும், பக்கத்திவே இருத்தியும், வெண்ணிலவு கண்டான்- அந்த நிலவை மறைத்திடும் கார் நிறக் கூந்தலை அவ்வப் பொழுது அப்புறம் தள்ளியபடி,