உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சொர்க்கத்தில் காகத்தானே இருந்தது? ஒரு முகமா ஆறு ஏழா? பிறந்ததும் பாடிற்றா,ஓடிற்றா? சொல்லடி சொர்ணபிம்பமே!சொல்லு. எங்கே, குழந்தை?' என்று ஆவலுடன் கேட்டாள் திலோத் தமர் "அழகான பெண் குழந்தை! அடவியிலேயே விட்டு விட்டேன்' என்று சோகமாகக் கூறினாள் மேனகா. 'அடவியிலா? அரண்மனையிலா?" என்று கேட்டாள் ரம்பை. அடவியடி அடவி! என் இன்பப் பெருக்கு, அன்புக் குழவி, கானகத்திலேதான்! வேறென்ன செய்வேன்! எனக்கு இடப்பட்ட கட்டளை விசுவாமித்திரனுடைய தவத்தைக் கெடுக்க வேண்டும் என்பதாகும். அவனே முன்கோபியாம்! முரடனாகவும் இருந்தான்! கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந் தவன் மீது காமக் கணைகளை வீச நான் கால் கடுக்குமளவு ஆடினேன்; கண் திறந்தான். சாபமிட வாய் திறந்தான் என்னைக் கண்டான், கோபம் மடிந்தது, காமம் கொப்பளித் தது. பசும் புற்றரை மஞ்சமாயிற்று. கிளியும் நாகண வாய்ப் புள்ளும் சுபசோபனம் பாடிட, மான் கூட்டம் நடனமாட, எங்கள் மதனவிழா இனிது நிறைவேறிற்று இனிது என் பது அவர் நிவை - நான்?- தாயானேன்- பெண் குழந்தை என்று விவரித்தாள் மேனகா. "பாரடி ரம்பா! பரமனை வேண்டி அந்த முனிவன் எத்தனையோ காலமாகத் தவங்கிடக்கிறான். நீரில் நின்றி ருப்பான், நெருப்பில் அமர்ந்திருப்பான், ஊசி முனையில் தவமிருந்திருப்பான். காற்றைத் தவிர வேறெதுவும் புசி யேன் என்று கூறி கடுந்தவம் புரிந்திருப்பான். வகை வகை யான யாகங்களைச் செய்திருப்பான். எனினும் வரம் கிடைக் வில்லை. மேனகையைப் பார்! திவ்ய தரிசனம் தந்தாள். வரமும் கொடுத்தாள்" என்றாள் திலோத்தமா. வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்து முத்த மிட்டு, கானகத்தில் கிடைத்த கட்டழகி பெற்றெடுத்த கனி யமுதே! காவியக் கர்த்தாக்களுக்கும் ஓவிய வித்தகர்களுக்கும்.