உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் – 5

யவர்கள் நாகபட்டினத்திற் புத்தகக் கடை வைத்திருந்தார்கள்.

அப்போது யாம் ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றுகொண்டிருந்தேமாகலின், ஒவ்வொரு நாளும் மாலையிற் கல்லூரியினின்றும் வந்தவுடனே புத்தகக் கடைக்குச் சென்று அருமையிற் சிறந்த எம்மாசிரியரிடஞ் செந்தமிழ் நூல்களைப் பயில்வது எமக்கு வழக்கமாய் நடந்து வந்தது. இங்ஙனம் நடந்து வருகையில், யாங் கல்வி பயிலும் ஆங்கிலக் கல்லூரியில் மேல்வகுப்பிற் கலை பயின்று வந்த மாணவர் ஒருவர் எமக்குச் சிறந்த நண்பராகித் தாம் அப்போது கற்று வந்த மனோன்மணீயம் என்னும் ஒரு நாடகக் காப்பியத்தை எம்மிடங் காட்டினர். அதனை வாங்கி நோக்குதலும் அக் காப்பியத்தின் சொன்னயம் பொருள் நயங்களுள் கதைப்போக்கும் அதன் புதிய நடையும் எமதுள்ளத்தை மிகவுந் கவர்ந்தன; உடனே அதனை எடுத்துப் போய் எம் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்களுக்குச் சொல்லிக் காட்டினேம்; அக் காப்பியத்தின் அருமையைக் கேட்டதும் “இதனை இயற்றினவர் யார்?" என்று ஆசிரியர் எம்மைக் கேட்டனர். அதற்குத் ‘திருவனந்தபுர அரசர் கல்லூரியில் அறிவுநூற் புலவராய் அமர்ந்திருக்கும் ஆலப்புழை எம்.ஏ.சுந்தரம் பிள்ளை அவர்களே' என்று விடை பகர்ந்தேம். அதுகேட்ட ஆசிரியர் சிறிதுநேரம் சும்மாவிருந்து, “யாம் இருபது ஆண்டுகளுக்குமுன் மலையாளஞ் சென்றிருந்தேம்; அப்போது ஒருகால் ஆலப்புழையில் தங்கநேரிட்டது; அப்பொழுது தான் ஆங்கிலமொழியில் கற்றுத் தேறிய சுந்தரம் பிள்ளை என்பவர் ஒருவரைக் கண்டேம்; அவர் பெருமாள் பிள்ளை மகன்; அவரோடு யாம் தங்கியிருந்த சிலநாளும் அவர் எம்மிடம் யாப்பருங்கலக் காரிகையிற் பல ஐயப்பாடுகள் கேட்டுந் தெளிந்து எம்மிடம் பெரிதும் அன்பு பாராட்டி, எம்மைத் தம்முடனேயே இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு யாம் சையாமல் வந்துவிட்டேம். அப்போது அவர்க்கு ஆண்டு இருபது இருக்கலாம். இப்போது நாற்பது இருக்கும். இந்நூல் இயற்றியவர் அவராகத்தாம் இருக்கவேண்டும்” என்று மொழிந்தார்கள். ‘அவ்வாறாயின் அவர்க்கு ஒரு கடிதம் எழுதலாமா?' என்று ஆசிரியரைக் கேட்டேம். அதற்கு ஆசிரியர் ‘அவ்வாறே செய்க என்று சொல்லித் தாம் இருபது ஆண்டுகட்குமுன் ஆலப்புழை வந்திருந்ததும் அவரைத் தாங்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/43&oldid=1576483" இலிருந்து மீள்விக்கப்பட்டது