உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

3. மனவெளி

இவ்வாறு நம் நினைவுகள் நடைபெறுதற்கு இடமாய் உள்ள நுண்ணிய இடைவெளியே மனவெளி எனப்படுவதாகும். மக்கள் உடம்புகளில் அமைந்த அமைவுகளும், அவ்வுடம்புகள் இருத்தற்கு இட மான இவ்வுலகத்தின் அமைவுகளும் தம்முள் ஒப்பனவாகும் என்பதும் நமதுடம்பாகிய இச் சிற்றுலகத்தினுள் ஒன்றினொன்று நுண்ணியவாயிருக்குங் கருவிகளுக்கு நேராகப் புறத்தே இப்பேருலகத்திலும் ஒன்றினொன்று நுண்ணியவான பொருள்கள் இயைந்து நிற்கும் என்பதும், இவ்வுடம்பின் அகத்தேயுள்ள மனம் நினைவு அறிவு முனைப்பு என்னும் நுண்கருவிகளோடு ஒத்த நுண்ணிய வெளிகள் புறத்தே உலகத்திலும் உண்டென்பதுஞ் சிவஞானபோத ஆராய்ச்சியில் நன்கு விளங்க விரித்துக் காட்டியிருக்கின்றேம். இவ்விடைவெளி களெல்லாம் ஒன்றினொன்று நுண்ணியவாய் ஒன்றை ஒன்று ஊடுருவிக்கொண்டிருக்கும். மண் நீர் நெருப்பு காற்று வெளி முதலிய ஐம்பொருள்களுள் மிகவும் நுட்பமானது வான்வெளி என்று சொல்லப்படும். இவ்வான்வெளியினையும் ஊடுருவிக் கொண்டு இதனினும் நுட்பமானதாய்இருப்பதே மனவெளி என்று சொல்லப்படுவது. இவ்விடைவெளி மக்கள் உடம்பினுள் உள்ள மனத்தோடு இயைந்து எங்கும் நிறைந்து நிற்பது. இவ்விடைவெளியினுள் எல்லாருடைய மனமும் அம் மனத்திற் றோன்றும் எண்ணிறந்த நினைவுகளும் ஒருங்கு இயைந்து நிற்கின்றன. ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளெல்லாம் - அவை பெரியனவேனும் சிறியனவேனும், உயர்ந்தனவேனுந் தாழ்ந்தனவேனும், நல்லனவேனும் தீயனவேனும் எல்லாங் கன்மேற் செதுக்கிய எழுத்துப்போல் அழியாமல் நிலைபெறுகின்றன. யான் எண்ணிய எண்ணம் பிறர் எவர்க்குந் தெரியாதென்று எண்ணி எவனும் மகிழா திருக்கக்கடவன்.அவன்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/50&oldid=1576491" இலிருந்து மீள்விக்கப்பட்டது