உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் – 5

அவை நல்ல நிலைமையோடு இருப்பதென்னை? எல்லாரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில் அவற்றின் கிட்டச் சென்றால், அவை உணர்விழந்து தூங்காமல் உணர்வோடிருத்தலைக் காண்கின்றோமே; தம்மை மறந்து தூங்குவதுபோற் காணப்படும் நாய் பூனை முதலான உயிர்களின் அருகே ஒருவர் அரவமின்றி எவ்வளவு மெதுவாய்ச் சென்றாலும் அவை உடனே எழுந்து ஓடுதலையுங் காண்கின்றோமே. நெடுநாள் உயிரோடிருந்த முதியவர்கள் தாம் உணர்வு கெட்டு உறங்கியதில்லை யென்றும், எவ்வளவு நேரந் தூங்கினாலும் நல்லுணர்வோடு கூடியேதாம் இருந்தனரென்றுந் தம் வரலாற்று நூல்களிற் கூறவுங் கேட்டிருக் கின்றோம். அப்படிப் பட்ட அம் முதியோர்களெல்லாம் நல்ல நிலைமையோடு ஒரு நூற்றாண்டுவரையில் உயிரோடிருந்தார் ளன்பதும் மறுக்கப்படாத உண்மையாம். இவ்வாற்றால், நன்கு இளைப்பாறுதற்பொருட்டு அறிவிழந்த தூக்கம் வேண்டப் படுவதில்லையெனவும், உணர்வோடிருந்து தூங்குவதால் உடம்பின் நலம் பழுதுபட மாட்டாதெனவும் இனிது தெளியப் பெறுகின்றோம். மற்று, உணர்வோடிருந்து துயிலுவதால் அறியாமை நீங்கி அறிவொளி பெருகிப் பேரின்பம் மிகுந்து உயிரையும் உடம்பையும் வலுப்படுத்திப் பல்லூழிகாலம் உயிரோடிருக்கச் செய்யுமென்னும் உண்மை செவ்வையாகப் புலப்படுகின்றது.

அங்ஙனமாயின் உணர்வோடிருந்து துயின்று நன்றாக இளைப்பாறுதற்கு வழி யாது என்றால், அவ்வழியின் பாகுபாடு களை முறையாக எடுத்துக் கூறுவாம். பகற் காலத்தில் மிகுதியாக உழைக்கின்றவர்களுக்கே இராக்காலத்தில் தம்மை மறந்த தூக்கம் வருதலால், உடம்பை மிகுந்த உழைப்பின்கண் வருத்துதல் ஆகாது.அவ்வாறாயின் உழைப்பாளிகளாய் இருக்கும் மக்களுக்கு வ்வுயர்ந்த பழக்கங்கள் கைகூடுமாறு யாங்ஙனமெனின், அவர்களும் இவற்றைச் செய்யவிரும்பி உயர்ந்த அறிவு நிலையை நோக்குவார்களாயின் நாம் இங்கே சொல்லியவாறு உடம்பின் உழைப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டுவது அவர்களுக்கும் இன்றியமையாததே யாகும்; அவர்களுக்கு அவ்விருப்பமும் உயர்ந்த நோக்கமும் எளிதிலே வரமாட்டா. அவர்கள் மிகவுந் கீழேயுள்ளதாகிய பிறவிப் படியில் நிற்கின்றார்களாதலால், மேல்நிலையில் உள்ள அறிவுக்களஞ்சியத்தைப் பெறுதற்குமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/73&oldid=1576668" இலிருந்து மீள்விக்கப்பட்டது