இலக்கியம் - 1
“ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே'
என்றும்,
ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ?”
என்றும் - எழுதிப் பரப்பினாராக,
ix
“ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம்” என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்!
தொல்காப்பியக் காவல்
தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல்,
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
என்றும்,
வேண்டும் என்பதை,
(884)
மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை
பேண
“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்”
(1597)
66
என்றும்,
பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், “மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
وو
(1590)
என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால்,
“ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது" என்னும் பாவாணர்,