உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

சாகுந்தல நாடக

விளக்க உரைக் குறிப்புகள்

(பக்கம் 1) எந்நூல் உரைப்பினும் அந் நூன்முகத்தில் வாழ்த்து,' ‘வணக்கம்,’ வருபொருளுரைத்தல்' என்னும் மூன்றும் உரைத்து அதனைத் அதனைத் தொடங்குதல் தொடங்குதல் வேண்டு மென்பதே ஆன்றோர் கொள்கையாதலின், சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தை இயற்றப்புகுந்த காளிதாசர் என்னும் வடமொழி நல்லிசைப்புலவர், முதற்கண் வாழ்த்தும் வணக்கமுங் கூறுவான்றொடங்கி அவைதம்மைச் சூத்திரதாரன் வாயிலாகக் கூறினார்.

‘அட்டமூர்த்தம்' என்னும் எட்டு வடிவாய் விளங்குஞ் சிவபெருமானை ஆசிரியர் வணங்கும் முகத்தால் வாழ்த்துரை கிளக்கின்றார்.

முதல் முதல் நீரே படைக்கப்பட்டதென்பது ஆரிய வேதநூல் வழக்கு. “அந்த முதற்பொருள் நீரேயாம்; அது மூச்சு லதாய்த் தன்னியற்கையினாலேயே மூச்சுவிடுவ தாயிற்று. என இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் கண்ணதான 129- ஆம் பதிகம் பகருதல் காண்க. அந் நீரிலிருந்தே தீயும், அந் தீயிலிருந்தே ஞாயிறும் உண்டாதலும் ஆண்டே நுவலப் படுகின்றது. இவ்வாற்றாற் காளிதாசர் தழுவிய உலகப் படைப்புமுறை பண்டை இருக்குவேத வழித்தாதல் காண்க. வேதகாலத்திற்குப் பிற்பட்டதான தைத்திரீய உபநிடதத்தில், விசும்பிலிருந்து காற்றுங், காற்றிலிருந்து தீயுந், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலனும் உண்டாயின என நுவலப்படுங் கொள்கை அவர்க்கு உடம்பாடன்று. நான்முகன் - படைப்புக் கடவுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/178&oldid=1577585" இலிருந்து மீள்விக்கப்பட்டது