249
அடிகளாரின் இலக்கிய வரலாற்றுத் திறம்
முன்னுரை
அடிகளார் என மதிப்புடன் அழைக்கப்படும் சான்றோர் ஒரு சிலருள் ஒருவராகத் திகழ்பவரே மறைமலையடிகளார். அற்றைநாள் தொட்டு இற்றைநாள்வரை நம் தமிழ் மாநிலத்தைச் செங்கோல் ஓச்சிய அரசர்கள் வரலாறும், அவர் காலத்திருந்த புலவர்கள் வரலாறும், அவரியற்றிய நூல்களின் வரலாறும், மயக்கமறத் தெளிவாகக் கற்றுத் தெளிந்த வித்தகர் இவர் என்பதை ‘மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்’ கற்றவர் எவரும் அறுதியிட்டுக் கூறுவர். விழிகள் இன்றிக் காணல் இயலாதது போலவே, இலக்கிய வரலாற்றறிவின்றிக் கால ஆராய்ச்சி செய்வதும் இயலாது. மாணிக்கவாசகர் காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டெனக் கூறிய திரு. கோபிநாதராவ், 'தமிழ் அராய்ச்சிகள்’ என்னும் நூலின் ஆசிரியர் திரு. எம். சீனிவாச ஐயங்கார், மற்றும் 'தமிழ் வரலாறுஞ் எனும் நூலின் ஆசிரியர் இவர்களுக்கு
மறுப்பாகவே அடிகளார் இந்நூலைச் செய்தார். அவருடை இலக்கிய வரலாற்றுத் திறத்தை இந்நூல்வழி நின்று ஆராய்வோம்.
காலப் பாகுபாடு
தமிழ் இலக்கிய வரலாற்றின் காலத்தைத் தனித் தமிழ்க்காலம், புத்தகாலம், சமண காலம், சைவ வைணவ காலம், பார்ப்பன காலம், ஆங்கிலக் காலம் என அறுவகையாகப் பிரித்து அவற்றை விளக்கும் திறம் பாராட்டுதற்குரியது.'பாரதப்போர் நிகழ்ந்தபோது உடனிருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் காலந்தொட்டுக் கி.பி. முதல்