உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

||-

அப்பாத்துரையம் - 28

இத்தகைய சிறப்புக் காட்சிகள் எதுவுமில்லாமலே ஒரு நாள் மாளிகையின் பெட்டிவண்டி ஒன்று மாளிகை முன் வந்து நின்றது. ஒன்றிரண்டு பணியாட்கள் மட்டும் ஆரவாரமின்றிச் சென்று வரவேற்றனர். வண்டியிலிருந்து முதலில் மாளிகைத் தலைவர் திரு மெர்ட்டனும், எளிய ஆடையுடுத்த ஒரு சிறுவனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னே மற்றொரு சிறுவன் இறங்கினான். முதற் சிறுவன் உடையும் தோற்றமும் மட்டுமின்றி அவன் நடையும் அவன் பணிமக்கள் அல்லது குடியானவன் வகுப்பைச் சேர்ந்தவன் என்று காட்டின. திரு மெர்ட்டன் அவனைக் கையிற் பற்றி இட்டுச் சென்றாலும் அவன் இயற்கைப் பணிவுடன் பின்னிடைந்தே சென்றான். அவர்கள் பின் வந்த சிறுவனோ தலை கவிழ்ந்து புறங்கைக் கட்டிக் கொண்டு சற்றுப் பின் தங்கி வந்தான்.ஆயினும் அவன் குடியானவச் சிறுவனல்ல என்பதை அவன் உடை காட்டிற்று. உண்மையில் அவன் திரு மெர்ட்டனின் ஒரே பிள்ளையான டாமி என்ற தாமஸ் மெர்ட்டனேயாவன்.

வீட்டினுள்ளிருந்து முப்பத்தெட்டு, நாற்பது ஆண்டு மதிக்கத்தக்க ஒரு செல்வமாது அவர்களை வரவேற்றாள். இதுவே திருவாட்டி மெர்ட்டன். அவள் முதலில் பின்னிடைந்து வந்த டாமியை எடுத்தணைத்துக் கொண்டாள். பின் மெர்ட்டனுடன் வந்த சிறுவனை நோக்கி “வா குழந்தை, உன்னைக் காண நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று பரிவுடன் வரவேற்றாள்.

குடியானவச் சிறுவனை எல்லாரும் களிப்புடனும் ஆதரவுடனும் நடத்தினர். மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அவனை அவர்கள் இட்டுச் சென்று காட்டினர். குடும்ப உணவு மேடையில் அவனுக்கும் குடும்பத்தினருடன் குடும்பத்தினன் போல நாற்காலியிட்டு வெள்ளி தங்கத் தட்டங்களில் உணவு வட்டித்தனர். ஆனால் சிறுவன் முகத்திலோ பணிவையும் நன்றியையும் தவிர வேறு உணர்ச்சியில்லை. கட்டுண்ட விலங்குபோல அவன் அச்சூழ்நிலைகளிடையே உணர்ச்சி யில்லாமல் கடமையாற்றினான்.

மாளிகையின் ஆடம்பரமும் பிறர் பரிந்துரையும் கூட அவனுக்கு இயற்கைச் செயலார்வத்தை உண்டு பண்ணவில்லை. சுவர்களிலும் நிலை மாடங்களிலும் பதிக்கப்பட்டிருந்த நிலைக் கண்ணாடிகள் அவன் கந்தலுடையையும் பிறர் கட்டுடை