உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. எண்ணெயும் தண்ணீரும்

டெவன்ஷயர் என்பது இங்கிலாந்தின் தென் மேல் பகுதியிலுள்ள ஒரு கோட்டம்! அதில் சிற்றூர்கள் மிகுதி. சிறு குடியானவர்களும் சிறு திறத்தொழிலாளர்களுமே இவற்றில் பெரும்பாலராக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வீடுகள் பெரிதும் கூரைவேய்ந்த குச்சுவீடுகளே. பேரூர்களில் ஊரிலிருந்து சற்று விலகித் தனியாகச் சிறு செல்வர், உயர் குடியினர் ஓட்டுவீடுகள் சில இருந்தன. இவை இரண்டு மூன்றடுக்குகள் உடையவை. பேரூர் ஒன்றில் குச்சு வீடுகளினின்றும் சிறு செல்வரின் ஊரிலிருந்து சற்று விலகித் தனியாகச் சிறு செல்வர், உயர் குடியினர் ஓட்டுவீடுகள் சில இருந்தன. இவை இரண்டு மூன்றடுக்குகள் உடையவை. பேரூர் ஒன்றில் குச்சு வீடுகளினின்றும் சிறு செல்வரின் ஓட்டுவீடுகளினின்றும் பிரிந்து தனியாக இடமகன்ற பெரிய மாளிகை ஒன்று இருந்தது. முயற்கூண்டுகளிடையேயும் ஆட்டுக் கிடைகளிடையேயும் அமைந்த ஒரு பேரவுனைக் கூடமாக அது காட்சியளித்தது. இதுவே திரு. மெர்ட்டனின் மாளிகை இல்லம்.

மெர்ட்டன் குடியினர் ஊரிலில்லாதபோது இம்மாளிகை யண்டை மிகுதி நடமாட்டம் கிடையாது.ஆனால் இப்போது சில நாட்களாக அவர்கள் இங்கிலாந்திலேயே இருந்து வந்தனர். எனவே அங்கே இப்போது மக்கள் நடமாட்டமும் பரபரப்பும் இருந்தன. அக்குடியினரின் உற்றார் உறவினரோ செல்வ உயர்குடி நண்பரோ வரும் நேரங்களில் இங்கே பரபரப்பு இன்னும் மிகுதியாயிருக்கும். மாளிகையினுள்ளே விருந்துகள், இசை அரங்குகள், ஆடல் அரங்குகள் நடைபெறும் போது, மாளிகை ஒரு சிறு கோயிலாகவும் சுற்றுப்புறம் ஒரு விழாக் கூடமாகவும் தோற்றமளிக்கும்.