உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. பெருமையும் சிறுமையும் தாம்தர வருமே

பொருள் ள் வகையில் திரு மெர்ட்டன் குடிக்கும், குடியானவச் சிறுவனாகிய ஹாரியின் குடிக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. திரு மெர்ட்டனை டெவன்ஷயர் மக்கள் ஜமெய்க்காச் செல்வர் என்று கூறி வந்தனர். ஜமெய்க்கா என்ற தொலை தூர மேலைத் தீவில் அவருக்கு ஏராளமான கரும்புத் தோட்டங்களும் கனிவயல்களும் இருந்தன. அவற்றில் உழைக்கப் பதினாயிரக் கணக்கான நீகிரோ அடிமைகளும்' அவர்களை மேற்பார்க்க ஆயிரக்கணக்கான குடிபடைகளும் வேலையாட்களும் இருந்தனர்.

அடிமைகளுக்கு அவர்கள் பூவுலகத் தேவர்களாகவும், மற்ற மக்களுக்குத் தொழில் மன்னர்களாகவும், பிற செல்வர்களுக்குச் செல்வர் சமூகத்தின் முதல்வர்களாகவும் விளங்கினர். பயணம் செய்யும்போது அவர்களை நீகிரோவர் பல்லக்கில் வைத்துச் சுமந்து சென்றனர். மற்றும் டாமிகூட, ஒரு நீகிரோ குடைபிடிக்க, மற்றொருவன் மூட்டை சுமக்க, மூன்றாவது ஒருவன் தன்னை வேண்டும்போது தூக்கிச்செல்ல, இளவரசன் போலவே தெருக்களில் கொண்டு செல்லப்பட்டான். வீட்டிலும் அவன் சல்வத்துக்குரிய ஒரே செல்லப்பிள்ளையாக வளர்ந்தான். அவன் கேட்ட உணவு உடனே தருவிக்கப்பட்டது. அவன் இம்மெனுமுன் பணி செய்ய எத்தனையோ பணியாளர்கள் இருந்தனர். அவன் சீற்றத்துக்கு யாவரும் அஞ்சி யொடுங்கி, நடுங்குவர்.

திரு மெர்ட்டன் அவன் படிப்புக்காகவே இங்கிலாந்துக்கு வந்திருந்தார்.