உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

97

என் தாய் தந்தையரிடம் இணக்கம் பெற்று மற்றொருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்” என்றான்.

திரு. மெர்ட்டன் இந்நிகழ்ச்சியின் பின் ஹாரியின் தாய் தந்தையரை உசாவியறிந்து அவர்கள் இணக்கம் பெற்று ஹாரியைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான்.

அடிக்குறிப்புகள்

1. நீகிரோக்கள் முழுக்கறுப்பு நிறமுடைய மக்களினத்தவர். திராவிட இனத்தவராகிய இந்தியர் செங்கறுப்பு அல்லது தவிட்டு பிற இனத்தவர். ஆரியராகிய ஐரோப்பியர் வெள்ளை நிற இனத்தவர். அமெரிக்க இந்தியர் சிவப்பு நிற இனத்தவர். சீனர் முதலிய கீழ் ஆசிரியாவின் மங்கோலிய மக்கள் மஞ்சள் நிற இனத்தவர். பண்டையுலகிலும் அண்மைகால அமெரிக்காவிலும் நீகிரோவர் அடிமைகளாக்கப்பட்டுக் கொடுமைக்காளாக்கப்பட்டனர். 19-ம் நூற்றாண்டிலேயே இவ்வடிமை வழக்கம் சட்டத்தில் ஒழிக்கப்பட்டது. ஆனால் நீகிரோவர் இன்னும் முற்றிலும் உயர் நிலை எய்திடவில்லை.

2.

இந்தியாவிலும் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்பட்ட மக்களும் இதுபோல் அடிமைப்பட்டு, பின் கொடுமைக்காளாக்கப்பட்ட மக்களே. சட்டத்தில்கூட அவர்கள் பற்றிய தனிக் கட்டுப்பாடுகளும் வேறுபாடுகளும் இன்னும் அகலவில்லை.