உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

99

தன்னைவிட மூத்தோர், பெரியோர் அல்லது வலிமையுடையோர் தீங்கு செய்தால் கூடியமட்டும் பொறுமையுடன் அத்தீங்குகளைப் பொறுத்து ஏற்று அவர்கள் தாமே திருத்திக் கொள்ளும்படி விட்டுவிடுதல் நலம் என்பதும்; நலிவுற்றோர், பெண்டிர், சிறுவர், ஏழைகள் ஆகியவர்களை எவரும் துன்புறுத்துவதை எதிர்க் காதிருக்கலாகாது என்பதும்; தீமையை எதிர்ப்பதில் மிகச் சிறந்த உயர்நெறி தீமைக்கு மாறாக நன்மை செய்வதே என்பதும் திரு பார்லோவின் உறுதிக் கோட்பாடுகள். இவையே நாளடைவில் ஹாரியின் கோட்பாடுகளாய் அவன் இயற்கைக் குணமாய் றிவிட்டன. ஆகவே அவன் உலகில் மதிப்படைந்ததில் வியப்பில்லை.

ஹாரியுடன் இப்போது உடன்மாணவனாக வந்த டாமி பலவகையில் ஹாரிக்கு நேர்மாறான இயற்கையும் பண்பாடும் உடையவன். அவனைச் சுற்றிலும் இருந்த உயர்குடி மக்களின் போலி வாழ்க்கைப் பண்பு பிஞ்சிலேயே அவன் உள்ளத்தில் தோய்ந்து உறைந்து போயிருந்தது. நீகிரோ அடிமைகளை விலங்குகளிலும் கீழாக மதித்து வதைக்கும் பண்பை அவன் மேலைத் தீவிலேயே இயல்பெனக் கொண்டிருந்தான். இங்கிலாந்திலும் ஏழைக் குடியானவர்களும் தொழிலாளர்களும் அவன் சமூகச் சூழலுக்கு அரைகுறை அடிமைகளாகவே தோற்ற மளித்தனர். கொடுத்ததை உண்டு அடிபடுவது அடிமைகளின் உரிமையானால், உணவுக் கூலிக்காகக் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தல் தாழ்குடியினர் கடமை என்றும்; இவ்விரு சாராரும் உயர்குடியினருக்கு உழைப்பதே அவர்கள் நீங்காக் கடனென்றும்; உயர் வகுப்பினரானோர் தாம் உழையாது பிறரை உழைக்க வைத்து அதட்டியும் ஆணை பிறப்பித்தும், உயர் வாழ்வும் இன்பமும் நுகர்தற்குரியவர் என்றும் அவனைச் சார்ந்தோர் கூறும் உரைகளை அவன் உறுதியுரைகளாகக் கொண்டிருந்தான்.

இவற்றுடன் குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததனால் அவனுக்குத் தற்சார்பு, தன் பொறுப்பு என எதுவும் இல்லாதிருந்தது. எதற்கும் அவன் அடிமைகளையும் வேலையாட் களையுமே நம்பியிருந்தான். அவர்களை அதட்டியும் அடித்தும் வேலை வாங்குவதனால் கடுஞ்சொல்லும் கொடுஞ்