உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

அப்பாத்துரையம் - 28

பார்த்து ஈர்ந்து அவன் ஓர் அழகிய குல்லாய்முடைந்தான். மறுதடவை இளைஞன் அப்பக்கம் வந்தபோது அவன் அவனை அருகிலழைத்து அவன் தலையில் அதை மாட்டி வைத்தான். இளைஞன், அதனால் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. ஊரில் அனைவரிடமும் சென்று அவன் அதைக் காட்டி மகிழ்ந்தான்.

அது முதல் இளைஞரும் பெண்களும், இளையோரும் முதியோரும் ஒவ்வொருவராக வந்து குல்லாய் கேட்டனர். கூடை முடைவோனுக்கு அதுவே தொழிலாகப் போய்விட்டது.அவனும் வகைவகையான தலையணிகள், அரைக்கச்சைகள், காலணிகள் செய்து கொடுத்து வந்தான். இவற்றால் மகிழ்ந்த தீவின் மக்கள் செல்வனுக்கு மட்டும் கட்டை சுமக்கும் வேலை தந்து; அவனைக் கூடைத் தொழிலிலேயே விட்டு ஆதரித்தனர். அவனுக்கு உணவு மட்டுமன்றி அவ்வூரில் கிடைக்கும் எல்லாப் பொருள்களையும் தந்தனர்.

சில நாட்களில் ஆட்சித் தலைவன் கப்பலையனுப்பி அவர்களை மீட்டுக் கொணர்வித்தான். செல்வன் இப்போது தன் ஏலாச் சிறுமையையும் கூடை முடைவோன் திறமை சான்ற நற்பணிப் பண்பினையும் உணர்ந்து ஆட்சித் தலைவனிடம் மன்னிப்புக் கோரினான். ஆனால் தலைவன் அவனிடம் கடுமையாக, “நீ நல்லறிவு கொண்டதற்கு மகிழ்ச்சியே. ஆனால் உன் செல்வ இறுமாப்புக்கு நீ இன்னும் தண்டனை பெற்றாக வேண்டும். உன் செல்வ முழுவதையும் இந் நல்லானுக்கும் அரசியலுக்கும் எடுத்துக் கொள்வதே சிறந்த தண்டனையாகும். ஆயினும் நீ உன் செல்வத்திற் பாதியை இவனுக்குக் கொடுத்து மறுபாதியை நல்லுணர்வுடன் பேணிக் கொள்ளும்படி பணிக்கிறேன்” என்றான்.

நீ

கூடைமுடைபவனோ ‘ஐயன்மீர்! செல்வன் அறியாமற் செய்த பிழைக்கு அவன் தீவில் அடைந்த தண்டனையே போது மானது. அத்துடன் எனக்கு அவன் என்சூரல் காட்டுக்கு ணையாகச் சூரல் வளரும் வேறு பகுதி கொடுத்தால் போதுமானது. அவன் செல்வத்தை அவனே என் பேரால் துய்த்து நுகரட்டும்' என்றான்.