உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

131

மூத்த பிள்ளையாகிய நான் தான் வேண்டிய உணவுப் பொருள் கொடுக்க வேண்டும்" என்றான்.

இதைக் கேட்ட டாமிக்கும் கண் கனிந்தது. “உன் தந்தை கவனிக்கமாட்டாரா?" என்று பின்னும்

இவற்றைக்

கேட்டான்.

சிறுவன்:

தந்தை உழைத்தால் கூட எங்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. இப்போதோ தந்தைக்கு உடலுக்குக் குண மில்லை. அம்மாவுக்கு அவர்களைக் கவனிப்பதிலேயே முழு நேரமும் போய்விடுகிறது. ஆகவே நான் விறகு பொறுக்கல், காட்டுக் காய்கனி கிழங்கு சேர்த்தல் ஆகியவற்றில் என் ஓய்வு நேரத்தையெல்லாம் ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. தந்தை உடல் நலப்பட்டு உழவு வேலைக்குப் போகும் வரை எங்களுக்குத் துன்பம் தான்.

சிறுவன் சொற்கள் டாமியின் உள்ளத்தை உருக்கின. பாவம்! சிறுவன் குடும்பக் கவலையுடையவனாய்ப் போதிய உணவு கூட இல்லாதிருக்க வேண்டும் என்பதைக் கவனித்தான். அவன் உடனே சரேலென்று ஆசிரியர் வீட்டினுட் சென்று ஒரு பெரிய அப்பத் துண்டையும் தன் ஆடைகளில் ஒரு முழுத் தொகுதியையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். "தம்பி, நீ எனக்கு இன்னல் நேர்ந்தபோது உதவினாய். நீ துன்பமடைவதைக் கண்டு நான் வாளா இருக்க முடியாது. எனக்குத் தேவைக்குமேல் யாவும் இருக்கின்றன. இவற்றை நீ எடுத்துக்கொள்” என்றான்.

சிறுவன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் டாமியிடம் மனமார நன்றி பாராட்டினான். அவன் மகிழ்ச்சிகண்ட டாமி தன் பொருள்களைத் தான் துய்ப்பதில் என்றும் கண்டிரா இன்பங் கண்டான்.

ஆசிரியரிடம் டாமி இவற்றைக் கூறியபோது அவர் உள்ளூர மகிழ்ச்சியடைந்தார். ஆயினும் அவர் அவனுக்கு இன்னும் சில நற்பழக்கங்களை உண்டு பண்ணும் எண்ணத்துடன் அவன் செயலைப் பாதி பாராட்டி அதில் சில குறைகளையும் விளக்கலானார். "நீ சிறுவனிடம் நன்றி தெரிவித்ததும்