உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14. யானையும் தையற் காரனும்

மறுநாள் விலங்குகளின் இயல்புகளை உணர்த்தவல்ல கதைகளில் ஒன்றை ஆசிரியர் சிறுவர்க்குக் கூறினார். அதுவே 'யானையும் தையற்காரனும்' என்ற கதை.

(கதை)

இந்தியாவின் மேற்கரையில் சூரத் என்று ஒரு நகர் உண்டு. அதில் பட்டும் சரிகையுமே தைத்து வரும் உயர்கலைத் தையற்காரன் ஒருவன் இருந்தான். அங்காடித் தெருவின் ஒரு திருப்பத்தில் அமைந்திருந்த அவன் தையற்கடை வழியாக ஒரு யானைப்பாகன் நாள்தோறும் தன் யானையைக் குளிப் பாட்டக் கொண்டு செல்வான். சில சமயம் பாகன் அருந்தகம் செல்கையில் அக் கடைப்புறத்திலேயே அதைக் கட்டி விட்டுச் செல்வான்.

ஒருநாள் யானை, வாயிற் கம்பிகளின் வழியாகத் தும்பிக்கையை உள்ளே நுழைத்துத் துழவுவதைக் கவனித்த தையற்காரன், அதற்கு ஒரு எச்சரிக்கையாகத்தன் ஊசியால் துதிக்கையில் குத்தினான். யானையின் துதிக்கை மிக மென்மை வாய்ந்தது. சிற்றூசியால் குத்தவே யானைக்குக் கடுப்பு மிகுதியாக இருந்தது. அதனால் அது தையற்காரன் மீது சீற்றங்கொண்டு அவனிடத்தே பகை கொண்டது.

மற்றொரு நாள் பாகன் குளிப்பாட்டும் போது யானை, அவன் அறியாதபடி துதிக்கை நிறையச் சேறும் நீரும் நிரப்பி அடக்கிக் கொண்டது. யானையின் துதிக்கை இரு குடங்க ளுக்கு மேல் பிடிக்கவல்லது. திரும்பிவரும்போது அது, சமயம் பார்த்து, உள்ளே பட்டுத் துணிகளைப் பரப்பித் தைத்துக்