உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

37

கரியது. இவ்வமைதியின் ஒரு கூறு வளர்ச்சிக்கு உதவுகிறது.எல்லா வளர்ச்சிகளையும் விளக்குகிறது. மற்றக் கூறு தளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தளர்ச்சியை விளக்கி அதுபற்றிய எச்சரிக்கையும் தருகிறது.

மனிதனின் ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும் அவன் வாழ்வின் ஒரு சிறு கூறேயாகும். ஆனால் அந்தக் கூறு அவன் வளர்ச்சிக்கு உதவும் வளர்ச்சிக் கூறாகவோ அல்லது தளர்ச்சிக்கு உதவும் தளர்ச்சிக் கூறாகவோ அமைதல் கூடும். வாழ்வின் முதல் கருத்து அல்லது சொல் அல்லது செயல் வளர்ச்சிக் கூறானால், அதுவே அவ்வாழ்வின் ஆகூழாய், அடுத்த கருத்து, சொல், செயல்களை எளிதில் வளர்ச்சிக் கூறுகளாக்க உதவுகிறது. ஒவ்வொரு படியிலும் வாழ்வுக் கூறுகள், வளர்ச்சிக் கூறுகளாக வளர்வதுடன், வாழ்விலும் ஆகூழ் வளம்பெற்றுப் பெருக்கமுறுகிறது. ஆனால் வாழ்வின் முதல் கருத்து, சொல் அல்லது செயல் தளர்ச்சிக் கூறாய்விடின், ஒவ்வொரு படியிலும் வாழ்க்கைக் கூறுகள் தளர்ச்சிக் கூறுகளாக வளர்கின்றன. வாழ்வில் போகூழ் பெருக்கம் கூறுகிறது.

வாழ்வின் நற்றொடக்கத்துக்குரிய முக்கியத்துவம் இதுவே. அதே சமயம், புதுத் தொடக்கம், புதுவாழ்வு புகுபவனை இது முற்றிலும் தடுத்துவிட முடியாது. ஏனெ னனில் புதுவாழ்வுத் தொடக்கமே புதிய ஆகூழ் அமைத்து, முந்திய போகூழின் செயலை நீடிக்கவிடாமல் செய்வதுடன், அதன் ஆற்றலையும் படிப்படியாகக் குறைத்தகற்றி விடுகின்றது.

று

மனிதன் ஊழ் அவன் ஒவ்வொரு சிறு வினையிலும் ஈட்டிச் சேர்க்கும் பண்பே. அது உரமுடைய பண்பானால், அது ஆகூழ் ஆகிறது. அது உரமற்ற பண்பானால், அதுவே போகூழ் ஆகி விடுகிறது. பண்பே இங்ஙனம் மனித வாழ்வின் உயிராய் அமைகிறது. ஆனால் அது ஏற்ற இறக்க இயல்புகளுடையதாய் நல்வாழ்வும் அல்வாழ்வும் வகுத்தமைக்கின்றது. பண்புரம் நல்வாழ்வாகவும், பண்புரக் கேடு அல்வாழ்வாகவும் துளங்கு கின்றன.

'உள்ளவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிட மிருந்து இருப்பதும் எடுக்கப்படும்' என்பதன் ஆழ்ந்த