உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

அணுவின் பண்பே, அண்டத்தின் பண்பு:

கணத்தின் பண்பே காலத்தின் பண்பு:

45

எல்லையற்ற ஆழ்பெருங் கடல்கூடச் சிறுதுளிகளால் ஆக்கப்பட்டதே.பரந்தகன்ற நிலவுலகம் சிறு தூசுகளின் தொகுதி. வானில் இயங்கும் பேரொளிக்கோளங்கள் நுண்ணொளி அணுக்களாலானவையே. இவற்றைப் போலவே உயிர் வாழ்க்கையும் சிறு நினைவு அலைகள், சிறு செயல்களால் ஆக்கப்படுவையே.

மனிதன், அவன் உயிர், உயிர் வாழ்வு நாம் பொதுவாகக் கருதுவதுபோலக் கருத்திலிருந்தும் செயலிலிருந்தும் வேறுபட்ட, அவற்றுக்குப் புறம்பான ஒரு பொருளன்று. அதேசமயம் இக் கருத்துக்களும் வினைகளும் ஒன்றுடனொன்று தொடர்பற்ற தனி நிகழ்ச்சிகள் அல்ல. அவை ஒன்றுடனொன்று ணை விசைவுடையன. ணைந்து இசைந்து அவை யாவும் ஒரே பொருளின் கூறுகள், உறுப்புக்கள், சங்கிலிக் கண்ணிகள் ஆகின்றன.

உன் வாழ்வு உன் உயிர், நீ அவற்றின் கோவையேயாவாய்! காலம் ஆண்டுகளின் தொடர்பாக; ஆண்டு மாதத்தின், மாதம் வாரத்தின், வாரம் நாளின் தொகுதியாக; நாள் ஓரையின், ஓரை கணத்தின், கணம் நொடிகளின் இணைவாக அமைவது போலவே, நீயும் உன் உயிரும் உன் வாழ்வும் யாவும் இவற்றின் கூட்டு மொத்தமாகவே செயல் பெறுகின்றன, வளர்ச்சி யுறுகின்றன. சினைகளின் பண்பே மொத்தமாதல்போல், கருத்துக்கள், வினைகளின் இயல்பே உன் இயல்பு ஆகும்.

2‘எல்லா வகைப் பொருள்கள், சூழல்களும் ஒருங்கே இணைந்ததே ஓர் ஆண்டு;

எழில் கோளமும் அதுவே!'

ஆண்டு, கோளம், வாழ்வு ஆகியவற்றைப் போலவே பண்பு களும், ஏனெனில் சிற்றுறுப்புக்களின், சிறு கூறுகளின் நன்மை தீமைப் பண்புகளே மொத்தத்தின் நன்மை தீமை இயல்புகளா கின்றன. சிறு கனிவுச் செயல்கள், அருட்பண்புகள், தன் மறுப்பு வினைகள் ஒருங்குசேர்ந்தே அருளாளரின் அருள் வாழ்வு