உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 29

அறியாமை, தன்னலம், மடமை, தெளிந்த நோக்கற்ற கண்மூடித்தனம் ஆகிய பாதைகள் இடருக்கும் சிக்கலுக்கும் இட்டுச் செல்வன. இவற்றைப் போலவே நீடின்பத்துக்கும் அமைதிக்கும் இட்டுச் செல்லும் பாதைகளும் உண்டு. அவையே மேற்கூறப்பட்ட அறிவு, மெய்யுணர்வு, தன்மறுப்பு ஆகிய நெறிகள் ஆகும். இந்நெறிகள் கண்டவன் இடர்களையும் இன்னல்களையும் நிமிர்ந்து நேர்நின்று எதிர்க்கிறான். அவற்றை வெல்வதன் மூலம் வழுக்களிலிருந்து வாய்மையும், துன்பத்தி லிருந்து இன்பமும், சிக்கல்களிலிருந்து அமைதியும் மலரச் செய்கிறான்.

இடர்தரும் இடர்

மடமை!

மனிதனுக்கு நேரும் எந்த இடரும் இன்னலும் மனிதனால் வென்றடக்க முடியாததாய் இருக்க முடியாது. ஏனெனில் இடரின் ஆற்றல் இடருக்குக் காரணமான மனிதன் ஆற்றலுக்கு உட்பட்ட தாகவே இருக்க இயலும். மேலும் இடர்கள் மனிதன் தன்னறிவற்ற தவற்றின் விளைவு மட்டுமே. தன்னுணர்வுடன் அறிவாற்றல் கொண்டு எதிர்க்கும் அவன் எதிர்ப்பாற்றலுக்கு அஃது ஒரு சிறிதும் ஈடுசெலுத்தமாட்டாது. ஆனால் இந்த ஆற்றல் செயலாற்ற வொட்டாமல், இந்த ஆற்றலையே அரித்துத் தின்னும் தீய பண்புகள் உண்டு - அவையே கவலையும் நச்சரிப்பும் ஆகும்.

கவலையும் நச்சரிப்பும் இடரை எதிர்க்கும் எதிர்ப் பாற்றலைக் குறைத்து இடரையே பெருக்கிவிடுகின்றன. சிக்கலகற்றும் அமைதியைக் குலைத்து, சிக்கலை மேலும் வலுப்படுத்திவிடுகின்றன. ஆகவே இடரும் சிக்கலும் தவிர்க்க விரும்புபவன் கவலையையும் நச்சரிப்பையும் தன் வாயிலருகே கூட அண்டவிடக் கூடாது. அவை தேவையற்ற பண்புகள், தீங்கான பண்புகள் ஆகும். இடர் கடக்கக்கூடிய, கடக்க வேண்டிய ஒன்று. அது கடக்க முடியாதது என்று கருதுவது, அதனை எண்ணி எண்ணி இரங்கிக் கவலைப்படுவது ஆகிய இரண்டுமே மடமைகள் ஆகும்.

கடக்க முடியாத ஓர் இடர் உண்டு என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம். அப்போதும் அதை நாம் இடர் என்று கூறமாட்டோம். ஏலாமை, நடவாமை என்றே கூறுவோம். இடர் வகையில் பயன்படாத கவலையும் நச்சரிப்பும் அப்போதும்