உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 29

வாழ்வின் ஒவ்வொரு கடமையும் ஓர் இன்றியமை யாமையே.ஆனால் அதற்கெதிரான ஒவ்வோர் உரிமையும் அதன் பயன், அதன் இன்பம் ஆகும். கடமைகளை உரிமைகளின் மறுபுறமாகக் கருதி, நண்பராக அணைத்துக் கொள்ளாத இடத்தில், அவை சுமைகள் ஆகின்றன. இன்றியமையாப் பொருள்களின் நிலையும் இதுவே. அவை கடமைகள், உரிமை களின் பொது அடிப்படை, அவற்றின் நிலைக்களங்கள்.

கடமைகள் இன்றியமையாச் செயல்களே; அவற்றை இன்ப அடிப்படை என்றறிந்து மனமகிழ்வுடன், ஆர்வத்துடன் ஏற்றுச் செயல் செய்யாமல், வேண்டா வெறுப்புடனும் மனக்குறை யுடனும் முணுமுணுத்துக் கொண்டு செய்பவன் தன்னைத்தான் எண்ணற்ற தேள் கொடுக்குகளுக்கும் நச்சுப் பாம்புகளின் கடிகளுக்கும் உரியவனாக்கிக் கொள்கிறான். அத்துடன் உண்மையின்பத்திலிருந்தும் அவன் தன்னை ஒட்டறுத்துக் கொள்கிறான். ஏனெனில் கடமைக்கும் உரிமைக்குமே அடிப் படையான இன்றியமையாச் செய்திகளை ஒதுக்கிவிட்டபின், அவன் இன்றியமைகின்ற, அஃதாவது அவசியமற்ற போலி ன்பங்களிலேயே இழைகிறான். இந்த இன்பங்களும் அவனுக்குத் துன்பமாகவே முடிவதனால், அவன் தன்னை இரட்டிப்புத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொள்கிறான்.

வாழ்வில் இன்பம் நாடுபவன், உரிமை விரும்புபவன், கடமை யுணர்வுடையவன் இன்றியமையாச் செய்திகளையே தன் இன்ப வேர்முதலாக, வாழ்க்கை முதலீடாகக் கொள்ள வேண்டும்.

36

'தூக்க மொழித்திடுவாய், உயிரே! துளங்கொளியின்

ஆக்க வெளியில் அளாவிப் பறந்திடுவாய்!

புதுவாழ்வுக் கீத மமைத்து நலம் பாடு!

மதுகையுடன் வாய்மை மலரும் இசை பாடு!

பொல்லாங் கெலாம் வென்ற பொன்னார்ப்புகழ் வெற்றிக்கு

எல்லா வளமும் இனிமையும் தோன்றிடப் பாடு!

ஐயம்விடு, கவலை, ஆரிடர்கள் சாயவிடு!

மெய்யான இன்பம், அறிவு பா, ஊடாக

வண்ணப் பூவாடை அணிந்து மகிழ்ந்தாடு!