உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

187

தீயசெயலால் விளையும் தற்காலிக இன்பங்கள் குழந்தை சங்கிலிக்கருப்பனைச் சங்கிலி என்று கருதி விளையாட எண்ணும் மடமை மை இன்பம் போன்றதே. அந்த அழகுத் தோற்றத் துக்குள் சாகடிக்கும் கொடிய ஆற்றலுடைய நச்சுப்பல் மறைந் திருக்கிறது என்பதை வளர்ந்த மனிதன் அறிவதுபோல், அனுபவ அறிவாளன் அப்போலி இன்பத்துக்குள் மறைந்துள்ள துன்ப விளைவை உணர்வான்.

தீய செயல்கள் மட்டுமல்ல, தீய கருத்துக்கள், தீய அவாக் களின் பகட்டான பல்வண்ணங்களுக்கிடையே மறைந்திருக்கும் கொடுநஞ்சை அனுபவ வாயிலாக அறிந்தவன் மீண்டும் அதைச் செய்ய விரும்ப மாட்டான். ஏனெனில் முன் அவன் காட்டிய விருப்பமே, முன் அதில் அவன் எதிர்பார்த்த இன்பமே இப் போது தன் மெய்யான முழுமையான கோர வடிவம் காட்டி அவனை எச்சரித்து அதிலிருந்து துரத்திவிடப் போதியது.

இரண்டக வாழ்வு: இரண்டாவது சான்று

வாணிக முயற்சியிலீடு பட்டிருந்த இளைஞனொருவன் ஒரு வழிபாட்டுக் கூடத்திலும் உறுப்பினனாய் இருந்தான். அக் கூடத்தில் அவனே சமயக்கருத்து விளக்கம் அளிக்கும் போதக னாகவும் உயர்வு பெற்றான். அவன் சமய அறிவும் சமய வாழ்வும் அந்த அளவுக்கு உயர்வுடையதாயிருந்தது. அவை அவனை உயர்த்தின. ஆனால் வாணிக முயற்சியை அவன் முன்போலவே செய்து கொண்டிருந்தான்.

சமய வாழ்வில் அவன் மேற்கொண்ட ஒழுக்க முறைக் கட்டுப்பாட்டை, வாய்மையை, அருளிரக்கத்தை அவன் இந்த வாணிகக் களத்தின் எல்லைக்குள் கொண்டுவரவில்லை. கொண்டுவர எண்ணவும் இல்லை. சமய உடுப்பைக் கழற்றி வைத்துவிட்டு வாணிக உடுப்பைப் போட்டுக் கொள்ளும் முறையிலேயே, அவன் வழிபாட்டுக் கூடத்தில் வாய்மையை மேற்கொண்டு, அதை விட்டு வாணிகக் களத்துக்கு வந்தவுடன் வாய்மையைக் கைவிட்டுப் பழைய சூழ்ச்சி முறைகளை எளிதில் மேற்கொண்டான். அதுபோலவே வாணிகக் களத்தில் சூழ்ச்சி முறைகளை மேற்கொண்டு, அதைவிட்டு வழிபாட்டுக் கூடத் துக்குப்போனவுடனே அம்முறைகளைக் கைவிட்ட வாய்மையை