உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14. இன்ப முடிவு

'வாய்மைசென்று சேர்வ திந்த நேர்மைநீதி, வளைத்திதனைத் திருப்புபவர் யாருமில்லை! தூய்மைதரும் அதன்உள்ளம்அன்பு, அதன்சி

துங்கமுடி இன்னமைதி; அது தொடர்வாய்!

2கடுமையெலாம் தீர்ந்த இடம் காண்டி, திண்ணம் கருதுகின்ற தீமையெலாம் நலமாம் வண்ணம்!

திடமுடனே உழைப்பின்பின் ஓய்வுவாரம் சென்றெட்டும் தெய்வநலம் திகழ்தேவாரம்!

ஆசிய சோதி.

விட்டியர்.

வாழ்க்கை பற்பல இன்ப முடிபுகளை உடையது.ஏனெனில் அதில் விழுமிய வீறு, தூய்மை, எழில்நலம் மிக உண்டு. உலகில் பழியும் மடமையும் மலிந்திருந்தாலும், கண்ணீரும் புண்ணீரும், துயரும் புன்மையும் மிக்கிருந்தாலும், அவற்றினும் மலிவாகத் தூய்மை உண்டு; அறிவு உண்டு. அமைந்த புன்முறுவலுடன் ஆறுதல் தரும் கனிவும், உவகையும் கழிபேரளவில் அதில் காணப்பெறும். அதுமட்டுமன்று, அதில் நன்மையின் ஆற்றல் பெரிது. ஒரு சிறிது தூய கருத்துத் தோன்றிவிட்டாலும், ஒரு தன்னலமற்ற செயல் எழுந்துவிட்டாலும், அவற்றிலிருந்து இடையறா எல்லையற்ற இன்ப அலைகள் எல்லையில்லாக் காலமெங்கும் பரவி இன்ப முடிவையே உறுதிசெய்துவிடும் தன்மையுடையது.

வாழ்க்கையின் பல இன்ப முடிவுகளுள், இன்பந் தங்கு மிடங்களுள் ஒன்று குடும்பம். இன்பக் குடும்பம் ஓர் இன்ப முடிபு. வெற்றிகரமான வாழ்வு மற்றோர் இன்ப முடிபு. வாழும் குழுக்களாகிய சமுதாயமும் இனமும் பேரினங்களும் இன்ப